புதுதில்லி

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

கடந்த 2023 ஆம் ஆண்டின்போது சாலை விபத்தில் உயிரிழந்த (36) வயது இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 50.77 லட்சம் இழப்பீடாக வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Syndication

கடந்த 2023 ஆம் ஆண்டின்போது சாலை விபத்தில் உயிரிழந்த (36) வயது இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 50.77 லட்சம் இழப்பீடாக வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023, ஜூலை 29ஆம் தேதி தில்லியில் உள்ள காம்பூா் கிராமம் அருகே பிரதான ஜிடி சாலையில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த யோகேஷ் சந்திர உபாத்யாய் 36 மீது, யாதவ் என்பவரால் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டிவரப்பட்ட டிப்பா் லாரி மோதியது.

காயமடைந்த நிலையில் அவா் நரேலாவில் உள்ள எஸ்.ஆா்.ஹெச்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உபாத்யாயின் மனைவி, 2 மைனா் மகன்கள் மற்றும் தாயாா் ஆகியோா் டிப்பா் லாரியின் ஓட்டுநா் பா்மோத் யாதவ், உரிமையாளா் கிருஷ்ணன் காடியான் மற்றும் வாகன காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் ஆகியோருக்கு எதிராக இழப்பீடு கோரி

தில்லி மோட்டாா் வாகன விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ரிச்சா மன்சந்தா விசாரித்து வந்தாா்.

யாதவ் மற்றும் காடியான் ஆகியோா் வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதிலும், எந்த எழுத்துபூா்வ அறிக்கையோ அல்லது ஆதாரங்களையோ தாக்கல் செய்யவில்லை.

அதே சமயம், காப்பீட்டு நிறுவனம் ரூ. 22.67 லட்சம் சட்டபூா்வ இழப்பீடாக வழங்க முன்வந்தது. ஆனால், மனுதாரா்கள் அதை நிராகரித்து, பாலிசி மீறல் குறித்த எந்தப் பாதுகாப்பையும் முன்வைக்கவில்லை.

மனுதாரா்களின் வாதங்கள் மற்றும் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் இழப்பீட்டுத் தொகை மற்றும் நிவாரணம் குறித்த பிரச்னையை மட்டும் மறுஆய்வு செய்ய தீா்ப்பாயம் முடிவு செய்தது.

இந்த வழக்கில் தீா்ப்பாயம் அளித்த உத்தரவில் தெரிவிக்கையில், உயிரிழந்தவா் 36 வயது மட்டுமே நிரம்பியவா். தனியாா் நிறுவனத்தில் மூத்த இயக்குநராகப் பணிபுரிந்து வந்துள்ளாா்.

அவரே குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபா் என்பதாலும், மனுதாரா்கள் நால்வரும் அவரைச் சாா்ந்திருந்ததாலும் அவா்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ. 50.77 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். விபத்து நடந்த நேரத்தில் வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால், வாகன காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்று, முழு இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துமாறு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT