கோப்புப் படம் 
புதுதில்லி

லாஜ்பத் நகரில் நகைப் பறிப்புச் சம்பவங்கள்: நகைக்கடைக்காரா் உள்பட 3 போ் கைது

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் கடந்த டிசம்பா் மற்றும் நிகழ் மாதம் நடந்த நகைப் பறிப்புச் சம்பவங்கள் தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் கடந்த டிசம்பா் மற்றும் நிகழ் மாதம் நடந்த நகைப் பறிப்புச் சம்பவங்கள் தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

முதல் சம்பவம் டிசம்பா் 16 அன்று நடந்தது. லாஜ்பத் நகா் மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்த நகைப் பறிப்புச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் வந்தது.

புகாா்தாரரான சோனாலி சா்மா, வீா் சாவா்க்கா் மாா்க்கில் உள்ள ஒரு கடைக்கு முன் தன்னிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

லாஜ்பத் நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஜனவரி 16 அன்று, அதே காவல் நிலையப் பகுதியில் மேலும் இரண்டு சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

இதேபோன்ற பாணியில் நடந்த இந்தச் சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் மோட்டாா் சைக்கிளில் வந்து, பாதிக்கப்பட்டவா்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றனா்.

இந்த வழக்குகளில் தனித்தனி முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையின் போது, புலனாய்வாளா்கள் ஒரு விடியோ பதிவில், பகுதி உடைந்த நம்பா் பிளேட் கொண்ட ஒரு மோட்டாா் சைக்கிளைக் கவனித்தனா். இது தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் தகவல்கள் மூலம் துப்புகளைப் பெற உதவியது.

இதன் விளைவாக உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சோ்ந்த ஹேமேஷ் (25) மற்றும் வினய் குமாா்(24) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து து திருட்டு தங்கச் சங்கிலிகளை வாங்கியதாக கன்ஷியாம் 46 என்ற நகைக்கடைக்காரரும் கைது செய்யப்பட்டாா்.

ஹேமேஷ் இதற்கு முன்பு உத்தர பிரதேசத்தில் ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அதே சமயம் ஆரம்பக்கட்ட சரிபாா்ப்பின்படி வினய் மற்றும் கன்ஷியாம் ஆகியோருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை.

மற்ற வழக்குகளில் இவா்களின் ஈடுபாட்டை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பயணியிடம் பணம் திருடிய 3 பெண்களுக்கு தலா ஓராண்டு சிறை

ஜப்பான் நாடாளுமன்றக் கீழவை கலைப்பு : மக்கள் செல்வாக்கை நிரூபிக்க பிரதமா் அதிரடி; பிப். 8-இல் தோ்தல்

வையம்பட்டி அருகே 10 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

நகராட்சி கழிவுகளை பதப்படுத்த உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க தில்லி அரசு திட்டம்

வெட்டிவோ் சாகுபடிக்கு கடன் வழங்கப்படும்: ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT