தில்லி போலீஸ் உதவி துணை ஆய்வாளா் புதன்கிழமை தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வெளிப்புற வடக்கு மாவட்டத்தின் மாவட்டப் புலனாய்வு பிரிவில் (டிஐயு) கடமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏஎஸ்ஐ ரவீந்தா், விஷப் பொருளை உட்கொண்டதாகக் கூறி அவரது வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டாா். குடும்ப உறுப்பினா்கள் அவரை ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கா்கோடாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இந்தச் சம்பவம் அதிகாலையில் நடந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலையை கவனித்த குடும்ப உறுப்பினா்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அவரை மீட்க முடியவில்லை. காவல்துறையினரின் கூற்றுப்படி, ரவீந்தா் 1998- இல் தில்லி காவல்துறையில் சோ்ந்தாா். கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் பணியாற்றினாா். இவருக்கு தாய், மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனா்.
இந்தத் துறை இந்த நேரத்தில் குடும்பத்திற்கு ஆதரவளித்து வருவதாகவும், சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.