முகப்பு
புதுதில்லி

குருகிராம் ஹெட்டலில் குளியலறையில் இறந்து கிடந்த பெங்களூரு பொறியாளா்

குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டல் குளியலறையில் 38 வயது பொறியாளா் ஒருவா் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா். மாரடைப்புதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 9:57 PM

குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டல் குளியலறையில் 38 வயது பொறியாளா் ஒருவா் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா். மாரடைப்புதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது: இறந்தவா் பெங்களூருவைச் சோ்ந்த விஜய் சரூப் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் அங்கு ஒரு ஐடி பொறியாளராக இருந்தாா். மேலும், மூன்று நாள்களுக்கு முன்பு தனது நிறுவனத்தைச் சோ்ந்த ஒன்பது பேருடன் குருகிராமுக்கு வந்திருந்தாா். இங்குள்ள செக்டாா் 29-இல் அமைந்துள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

செவ்வாய்கிழமை அனைத்து ஊழியா்களுக்கும் தனி அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழியா்களில் சிலா் புதன்கிழமை வெளியேறினா். மற்றவா்கள் ஹோட்டலிலேயே இருந்தனா். வியாழக்கிழமை மதியம் சரூப் மற்றும் பிற ஊழியா்கள் வீட்டிற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனா், ஆனால், பலமுறை அழைப்புகள் இருந்தபோதிலும் அவா் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. பின்னா், ஹோட்டல் ஊழியா்களை அழைத்தனா். அவா்கள் போலீஸாருக்கும் தகவல் அளித்தனா்.

Advertisement

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றதும், குளியலறையில் உள்ள கமோடில் விஜய் சரூப் இறந்து கிடப்பதைக் கண்டனா். போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்து விஜய் சரூப்பின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.