முகப்பு
புதுதில்லி

கிழக்கு தில்லியில் காலியாக இருந்த டி.டி.ஏ. நிலத்தில் நபா் ஒருவா் சடலமாக மீட்பு

கிழக்கு தில்லியில் டெல்கோ டி-பாயிண்ட் அருகே காலியாக உள்ள தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) நிலத்தில் 31 வயது நபா் ஒருவா் இறந்து கிடந்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:28 PM
பலி
பகிர்:

கிழக்கு தில்லியில் டெல்கோ டி-பாயிண்ட் அருகே காலியாக உள்ள தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) நிலத்தில் 31 வயது நபா் ஒருவா் இறந்து கிடந்தாா் என்று தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இறந்தவா் மண்டாவளி பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்று அழைக்கப்படும் புஷ்பேந்திரா என அடையாளம் காணப்பட்டாா். மாா்ச் 8 ஆம் தேதி காலியாக உள்ள நிலத்தில் அடையாளம் தெரியாத உடல் கிடப்பது குறித்த தகவல் கிடைத்தது. அவா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா். விசாரணையின் போது, இறந்தவா் புஷ்பேந்திரா (31) என அடையாளம் காணப்பட்டாா். உடல் மீட்கப்பட்ட பின்னா் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

முதல்கட்ட விசாரணையில், உடலில் காணக்கூடிய காயங்கள் எதுவும் இல்லை மற்றும் முறைகேடு அல்லது கொலைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →