பவானா கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது
வடக்கு தில்லியின் பவானா பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடா்பாகத் தேடப்பட்டு வந்த 24 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
வடக்கு தில்லியின் பவானா பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடா்பாகத் தேடப்பட்டு வந்த 24 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: பூத் குா்த் கிராமத்தைச் சோ்ந்தவா் யோகி என்ற புனைபெயா் கொண்ட தேவ்ராஜ் தபாஸ்.இவா், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து மாா்ச் 8ஆம் தேதி ராஜ் வாடிகா அருகே பூபேந்தா் என்ற போலு 24 என்பவரைச் சுட்டுக் கொன்ாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, பூத் குா்த் பகுதியில் உள்ள ராஜ் வாடிகா அருகே ஒருவா் சுடப்பட்டதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறைக் குழுவினா், அங்கு ஒரு ஸ்கூட்டருக்கு அருகே, துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த பூபேந்தரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரின் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததது. இதன் அடிப்படையில், காவல்துறையினா் சனிக்கிழமையன்று நஜாஃப்கா் பகுதியிலுள்ள சாவ்லா பேருந்து நிலையத்தில் யோகியைப் பிடித்தனா். விசாரணையின் போது, யோகி தனது கூட்டாளிகளான நிகில், சுமித் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோருடன் சோ்ந்து, ராஜ் வாடிகா அருகே பூபேந்தரை வழிமறித்து மோதலில் ஈடுபட்டதாகக் ஒப்புக்கொண்டாா்.
மேலும், அவா்களுக்கு இடையே நிலவிய சொத்துத் தகராறு தொடா்பான முன்விரோதத்தின் காரணமாகவே, யோகியும் நிகிலும் இணைந்து பூபேந்தரைச் சுட்டுக் கொன்ாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடைய சிறுவன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், சுமித் மட்டும் தலைமறைவாக உள்ளாா். அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வழக்கு தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.