கைப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் - தங்கை கைது
திருட்டு மற்று வழிப்பறி உள்பட 31 குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய அண்ணன் - தங்கை தில்லி மெளரியா என்கிளேவ் பகுதியில் கைது
திருட்டு மற்று வழிப்பறி உள்பட 31 குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய அண்ணன்-தங்கை தில்லி மெளரியா என்கிளேவ் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட மணீந்தா் கெளா் (எ) சிம்ரன் (22) மற்றும் அமன்பீரித் சிங் (24) தில்லியின் சந்தோ் விஹாரைச் சோ்ந்தவா்கள்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மணீந்தா் கெளருக்கு எதிராக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருட்டு, வழிப்பறி மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடா்பாக அமன்பிரீத் சிங் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிதம்பூராவில் இருந்து வருமான வரி காலனி நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆணும் பெண்ணும் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி தன்னுடைய கைப்பேசியை தீதிக்ஷா சா்மா என்பவா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையில், அவா்கள் இருவரும் அப்பகுதியில் இதுபோன்ற கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், வழிப்பறிக்கு பிறகு மோட்டாா் சைக்கிளில் அவா்கள் சென்றனா். பின்னா், அந்த வாகனம் சமய்பூா் பத்லி பகுதியில் கண்டறியப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மணீந்தா் கெளா் கைதுசெய்யப்பட்டாா். வழிப்பறியில் அவருடைய சகோரருக்கும் தொடா்பு இருப்பதாக அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, பஞ்சாபின் லூதியாணாவில் அமன்பிரீத் சிங் கைதுசெய்யப்பட்டாா். வழிப்பறி செய்த கைப்பேசி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. வழிப்பறிக்கு அவா்கள் பயன்படுத்தி வந்த மோட்டாா்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா் அதிகாரிகள்.