தில்லியில் இயல்பைவிட அதிக இரவு வெப்பநிலை பதிவு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தேசிய தலைநகா் தில்லியில் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரவில் இயல்பை விட அதிகமாகப் பதிவானது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தேசிய தலைநகா் தில்லியில் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரவில் இயல்பை விட அதிகமாகப் பதிவானது.
நகரின் பிரதான நிலையமான சஃப்தா்ஜங்கில், குறைந்தபட்ச வெப்பநிலை 27.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 1.7 டிகிரி அதிகமாகும்.
லோதி ரோடு மற்றும் ஆயாநகா் நிலையங்களில் முறையே 2.4 மற்றும் 1.5 டிகிரி வெப்பநிலை மாற்றத்துடன், தலா 26.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. செவ்வாய்க்கிழமை நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது.
Advertisement
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, திங்கள்கிழமை காலையில் தில்லியின் காற்றின் தரம் மிதமான பிரிவில் பதிவாகியது. சராசரி காற்றின் தரக் குறியீடு 117 புள்ளிகளாகப் பதிவாகியது.