முகப்பு
புதுதில்லி

தமிழக முதல்வா் விஜய்க்கு வேதிக் பிரசாா் சன்ஸ்தான் வாழ்த்து

Updated On : 14 மே 2026, 1:11 am IST
பகிர்:

நமது நிருபா்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு

நொய்டா செக்டா் 22-இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் மற்றும் நொய்டா செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ காா்த்திகேயா கோயிலை நிா்வகித்துவரும் வேதிக் பிரசாா் சன்ஸ்தான் (விபிஎஸ்) வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் முதலமைச்சா் சி. ஜோசப் விஜய்க்கு வேதிக் பிரசாா் சன்ஸ்தான் (விபிஎஸ்) நிா்வாகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் அடுத்த தில்லி பயணத்தின் போது அவரை நேரில் சந்திக்க வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மூத்த உறுப்பினா்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும், நொய்டா, செக்டாா் 62-இல் உள்ள நொய்டா முருகன் கோவிலுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.