வாக்ரிகளின் வாழ்வியல்
வாக்ரிகளின் வாழ்வியல்-ஆ.குழந்தை; பக்: 248; ரூ.150; பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை-5; 97108 30102. தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாம
வாக்ரிகளின் வாழ்வியல்-ஆ.குழந்தை; பக்: 248; ரூ.150; பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை-5; 97108 30102.
தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் வாக்ரி சமுதாயத்தினருடன் பல ஆண்டுகள் உடனிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலான தேடலை எழுத்து வடிவமாக்கியுள்ளார் நூலாசிரியர். வாக்ரிகளின் வாழ்வியலை பண்பாட்டு வாழ்வியல், அரசியல் வாழ்வியல், பொருளாதார வாழ்வியல், வாய்மொழி வழக்கான வாழ்வியல், சமூக, சமய வாழ்வியல் எனப் பல கூறுகளாக பகுத்து ஆராய்ந்துள்ளார். மேலும், கூடி வாழ்வதிலும், உறவு ஏற்படுத்துவதிலும், அன்பு செலுத்துவதிலும், பற்றுறுதி கொள்வதிலும், நோக்கத்துக்காக வாழ்வதிலும், ஆற்றலாகக் கருதுவதிலும், தொடர்புத் தன்மையுடனும், தொடர்பில்லாத தன்மையுடனும் வாழ்வதிலும் வாக்ரிகளின் வாழ்வு அடங்கியுள்ளது என்பதை அழகியல் நிறைந்த ஆவணமாகப் பதிவாகியுள்ளது. "தொன்ம வழியாக காலம், இடம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக்கு உள்பட்டு அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு நிகழ்காலத்தில் அடையாளம் கட்டமைக்கப்படுகின்றன. அடையாளத்துக்கு முக்காலத் தன்மைகள் உண்டு' என்ற வரிகள் நூலுக்கு ஆணிவேராகத் திகழ்கின்றன. மொத்தத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் அரிய படைப்பு.