முகப்பு
நூல் அரங்கம்

பூலோக சொர்க்கங்கள்

பூலோக சொர்க்கங்கள் - கலைமாமணி யோகா; பக்.144; ரூ. 125; யோகா-சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தியாகராய நகர்,சென்னை-17. புகைப்படக் கலைஞராக புகழ் பெற்றிருக்கும் கலைமாமணி யோகா எழுதியுள்ள பயணக் கட்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:01 AM
பகிர்:

பூலோக சொர்க்கங்கள் - கலைமாமணி யோகா; பக்.144; ரூ. 125; யோகா-சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தியாகராய நகர்,சென்னை-17.

புகைப்படக் கலைஞராக புகழ் பெற்றிருக்கும் கலைமாமணி யோகா எழுதியுள்ள பயணக் கட்டுரைகளின் தொகுப்பே "பூலோக சொர்க்கங்கள்'. உலகின் ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் பரவசத்தையும் அளிப்பவை.

துபாய், இமயமலை, மூணாறு, தரம்சலா, கர்நாடகம், மந்திராலயம் என தான் பயணித்த இடங்களையும்,அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பரவசத்துடன் விவரித்துள்ளார் நூலாசிரியர். இதனைப் படிக்கும்போது ஆச்சரியமும், அந்த இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது.

Advertisement

நல்லி குப்புசாமி செட்டியாருடன் கேரளத்தின் குமரகத்துக்கு சென்ற அவரின் அனுபவம் நமக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது.

உல்லாச பயண அனுபவங்களுடன் ஆன்மிக பயண அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார் யோகா. சைதன்ய மகாபிரபு பிறந்த மாயாபுரி, இமயமலையில் உள்ள பாபாஜி ஆஸ்ரமம், மந்திராலயம், கர்நாடகத்தில் உள்ள கோயில்கள் ஆகியவற்றில் யோகாவுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆன்மிகவாதிகளுக்கு மெய்

சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும்.

யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற அனுபவங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பாலைவன தேசத்தின் செழுமையை தனது புகைப்படத்தில் மட்டுமல்ல எழுத்திலும் லாகவமாகக் கொண்டுவந்துள்ளார் யோகா. மொத்தத்தில் ஊர் சுற்றும் ஆர்வமுள்ள சுற்றுலா பிரியர்களின் கரங்களில் எப்போதும் இருக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.