முகப்பு
நூல் அரங்கம்

திருவள்ளுவர் புலப்படுத்தும் மகளிர் நிலை

திருவள்ளுவர் பெண்ணினத்துக்குப் பெருமை சேர்த்தவரா? இல்லையா? என்ற சர்ச்சை நீண்ட நெடுங்காலமாக அறிஞர் பெருமக்களிடையே நிலவி வருகிறது. வள்ளுவர் பெண்ணினத்தில் உரிமைக்குக் கு(ரல்)றள் கொடுத்தவர் எனச் சிலரும், அவர் பெண்ணடிமையைப் போற்றியவர் எனச் சிலரும் கூறி வருகின்றனர்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:09 AM
பகிர்:

திருவள்ளுவர் புலப்படுத்தும் மகளிர் நிலை - தி.வெ. விஜயலட்சுமி; பக்.128; ரூ.50; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044-2536 1039.

திருவள்ளுவர் பெண்ணினத்துக்குப் பெருமை சேர்த்தவரா? இல்லையா? என்ற சர்ச்சை நீண்ட நெடுங்காலமாக அறிஞர் பெருமக்களிடையே நிலவி வருகிறது. வள்ளுவர் பெண்ணினத்தில் உரிமைக்குக் கு(ரல்)றள் கொடுத்தவர் எனச் சிலரும், அவர் பெண்ணடிமையைப் போற்றியவர் எனச் சிலரும் கூறி வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க, "ஆராய்ந்து பார்த்தால், திருவள்ளுவர் தம் கால எல்லையில் நிலவிய பெண்ணினத்தின் அவலங்களை எல்லாம் நன்கு தெளிவாக அறிந்து, அவர்களின் எழுச்சிக்கு - பெருமைக்கு உரிய சிந்தனைகளை வழங்கியுள்ளார் என்பது தெற்றெனப் புலப்படும்' என அணிந்துரை வழங்கியுள்ள கு.மோகனராசுவின் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதை நூலில் உள்ள பத்து ஆய்வுக் கட்டுரைகளும் மெய்ப்பித்திருக்கின்றன.

÷சங்ககாலப் பெண்களின் நிலையைச் சுருக்கமாக எடுத்துக் கூறி, திருவள்ளுவர் கூறும் காதலி, வாழ்க்கைத் துணைவி, மனைவி, பெண்கள், தாய், ஊடற்கால பெண்களின் நிலை, மென்மையுள் வன்மை, வரைவின் மகளிர், பெண்ணுரிமைச் சிந்தனைகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் மகளிர் நிலை எழுத்தோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஆய்வு நூல் என்று முன்னுரையில் கூறியிருப்பதற்கு ஏற்ப சிறந்த ஆய்வாகத் திகழ்ந்தாலும், ஓர் ஆய்வு நூலின் முக்கியமான இலக்கணங்களுள் ஒன்றான "அடிக்குறிப்புகள்' குறிப்பிடப்படாதது மிகப்பெரிய குறையாகவே உள்ளது.

÷பெண்ணின் பெருமை பேசும் இந்நூலை இன்றையப் பெண்கள் கட்டாயம் படித்து, கைவசம் வைத்திருப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.