அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி - v - விண்வெளித் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்கள்
அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி - v - விண்வெளித் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்கள் - நெல்லை சு முத்து; பக்.358; ரூ.300; தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை - 5.
அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி - v - விண்வெளித் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்கள் - நெல்லை சு முத்து; பக்.358; ரூ.300; தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை - 5.
தமிழில் மிக அபூர்வமாகவே நல்ல தரமான நூல்கள் வெளியாகின்றன. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள இந்த நூல் அப்படிப்பட்டதாகும்.
விண்வெளியில் உள்ள நிலைமைகள், ராக்கெட் தோன்றிய வரலாறு, ராக்கெட் வடிவமைப்பு, எரிபொருட்கள், ராக்கெட் தளம், செயற்கைக்கோள்கள், விண்கலன்கள் என்று தொடங்கி எதிர்கால ராக்கெட் எஞ்சின்கள் வரை அனைத்தும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக மூன்று அல்லது நான்கு நூல்களில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் இந்த ஒரே நூலில் இடம் பெற்றுள்ளன.
என்றாலும் சில குறிப்பான விஷயங்கள் விரிவாகச் சொல்லப்படவில்லை. இந்தியா பல்வேறான செயற்கைக்கோள்களை உயரே செலுத்திப் பல சாதனைகளைப் படைத்தது, தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் துறையில் இந்தியா கிட்டத்தட்ட முதலிடம் வகிப்பது, சந்திரயான் பல கோளாறுகளுக்கு உள்ளாகி இறுதியில் ஒரு பெரிய கண்டுபிடிப்பைச் செய்த விஷயம் போன்றவை இடம் பெறவில்லை.
நூலாசிரியர் பல புதிய கலைச் சொற்களையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளார். எனினும் புரிதல் அவசியம் என்று கருதி ஆங்காங்கு அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஏராளமான படங்கள் உள்ளன.
ராக்கெட், செயற்கைக்கோள், விண்கலன்கள் ஆகியவை பற்றி நன்கு அறிந்து கொள்ள விரும்புவோருக்கு சிறந்த நூல். இது ஒரு தகவல் களஞ்சியம்.