முகப்பு
நூல் அரங்கம்

விவசாய விமோசனம்

விவசாய விமோசனம் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.142; ரூ.60; யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; )044 - 2825 0519.

நூல் அரங்கம்

விவசாய விமோசனம்

விவசாய விமோசனம் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.142; ரூ.60; யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; )044 - 2825 0519.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:11 AM
பகிர்:

விவசாய விமோசனம் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.142; ரூ.60; யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; )044 - 2825 0519.
2013 - 2015 காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி ஆகியவற்றில் வெளிவந்த கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
செயற்கை உரத்துக்குப் பதிலாக இயற்கை உரங்களைத் தயாரிப்பது எப்படி? தேசிய நீர்வழிச் சாலை அமைக்கப்பட்டால், போக்குவரத்து மட்டுமல்ல, விவசாயமும் மேம்படும்; மக்களுக்குக் குடிநீர் கிடைக்கும், நிலத்தடி நீர் உயரும் என்பன போன்ற கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன.
பாலில் தண்ணீரைக் கலந்துவிட்டு, அதை அடர்த்தியாகக் காண்பிக்க, அதில் ஸ்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா,சர்க்கரை, குளுகோஸ் ஆகியவற்றைச் சேர்க்கிறார்கள். அந்தக் கலப்படப் பால் கெடாமல் இருக்க சோடியம் ஹைட்ராக்ûஸடு போன்ற ரசாயனப் பொருள்களையும் சேர்க்கிறார்கள். எனவே வெளுத்ததெல்லாம் பால் என்று வாங்கக் கூடாது என்கிறார் நூலாசிரியர்.
"பி.ட்டி கக்தரிக்காயைப் பரிசோதித்தால் விஷம் தெரியாது. ஆனால் பொரியலாகவோ, கூட்டாகவோ செய்தால் விஷம் வெளிப்படும்.
பேயர்ஸ், டூபாண்ட், மான்சென்டோ, டொவ் கார்கில் மெர்க் என்ற வரிசையில் விட்டுப்போன பன்னாட்டு எமதர்ம நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகள் பெட்ரோலியப் பொருள்கள், ரசாயன உரம், பூச்சி மருந்துகள், மனித மருந்துகள், நவீன பாக்கெட் உணவுகள், பி.ட்டி விதைகள் போன்றவை.
விஷத்தைப் பரப்புவர்களும் அவர்களே. விஷத்தால் நோயுற்ற மனிதர்களுக்குப் புதிய புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து அளிப்பவர்களும் அவர்களே. இவர்களிடம் இருந்து மீள ஒரே வழி இயற்கை விவசாயமே' என்கிறார் நூலாசிரியர்.
இந்நாட்டின் விவசாயத்தை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் மேம்படுத்த இந்நூல் விதைக்கும் சிந்தனைகள் உதவும் என்பதில் ஐயமில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →