நூல் அரங்கம்

சிதறு தேங்காய்

சிதறு தேங்காய் - வெ.இறையன்பு: பக்.112; ரூ.80; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் - 1; )0422 - 2382614.

வெ. இறையன்பு

சிதறு தேங்காய் - வெ.இறையன்பு: பக்.112; ரூ.80; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் - 1; )0422 - 2382614.
"குமுதம்' வார இதழில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய குறுங்கதைகளின் தொகுப்புதான் "சிதறு தேங்காய்'. மனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்கசப்புகளுக்கு கதைகள் மூலம் தீர்வு வழங்குகிறது இந்த நூல். கதைகள் யாவும் இதுவரை அதிகம் கேள்விப்படாதவை என்பதுதான் சிறப்பு. சில கதைகள் நூலாசிரியரின் அனுபவ கதைகள் என்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. சொல்லப்படாத சில கதைகளில் ஒன்று, ராமாயணத்தில் சீதை மட்டும் தீக்குளிக்கவில்லை;கற்பை நிரூபிக்க லட்சுமணனும் தீக்குளித்தான் என்பதுதான். மராத்திய ராமாயணமான பவர்த் ராமாயணத்தில் வரும் இதுபோன்ற கதைகள், இந்தச் சிறு நூலை ஒரே மூச்சில் படிக்க வைக்கின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்விதமாக அமைந்துள்ள இதிலுள்ள 36 கதைகளும் வாழ்க்கைப் பாடங்கள் என்றால் அது மிகையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT