மறைக்கப்பட்ட பாரதம்
மறைக்கப்பட்ட பாரதம்- பி.ஆர்.மஹாதேவன்; பக். 124; ரூ.150; தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், மதுரை-3; 1800 425 7700.
'ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே இந்தியா வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை; அதற்கு முன்னரே பாரதம் சிறந்து விளங்கியுள்ளது' என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட இயக்கத்தினரால் மறைக்கப்பட்ட பாரதத்தின் உண்மைச் சித்திரமானது ஆங்கிலேயர்களின் ஆவணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் காட்டப்பட்டுள்ளது என்று நூலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் வருகைக்கு முன்பும் பின்பும் பாரதத்தின் நிலை, மறைக்கப்பட்ட வரலாறும் உண்மை வரலாறும், பழங்கால ஹிந்துக்களின் வான சாஸ்திர நிபுணத்துவம், மலம் அள்ளும் தொழிலும் உலக நடைமுறையும், தங்கத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை என்று 18 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
வரலாறு, அரசியல், சமூகம், ஆன்மிகம், பொருளாதாரம், வணிகம் என்று பாரதத்தின் அன்றைய நிலையும் இன்றைய நிலையும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் பின்தங்கியிருந்ததாகக் கூறப்படுவது உண்மையில்லை என்பது நூலை வாசிக்கும்போது தெரிகிறது. மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டிய நூல் இது.