முகப்பு
நூல் அரங்கம்

அம்மன் தரிசனம்

அட்டைப் படத்தில் ஆலிலைக் கண்ணன் அபாரம். முழுக்க முழுக்க ஆன்மிகத்தோடு தொடர்புடைய 57 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  சைவம், வைணவம் என இரண்டுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

அம்மன் தரிசனம் - பக். 342; ரூ.175.  

அட்டைப் படத்தில் ஆலிலைக் கண்ணன் அபாரம். முழுக்க முழுக்க ஆன்மிகத்தோடு தொடர்புடைய 57 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  சைவம், வைணவம் என இரண்டுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 

ராமாயணம், மகாபாரதத்தில் தெரிந்ததும், தெரியாததும் என இரு இதிகாசங்களும் மக்களுக்கு உணர்த்தும் உண்மைகள் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன. நல்லதொரு நாளில்,  விரைந்து படித்து  ஆன்மிகக் கடலில் திளைக்க அரிய வாய்ப்பு.

தெரிந்த புராணம்- தெரியாத கதை,  பாவம் போக்கும் கங்கை நீராடல், தெய்வங்களின் திருநடனங்கள், தானத்தின் நன்மைகள், காசியும் கங்கா ஸ்நானமும்.. உள்ளிட்ட கட்டுரைகளைப் படிக்க, படிக்க நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலகி ஓடும் என்பதில் ஐயமில்லை.

முக்கிய மகான்கள் குறித்த தகவல்கள், அவர்களின் வாழ்த்துகள், முக்கிய கோயில்களின் சிறப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
துளசி விவாஹம், ஆத்ம விஞ்ஞானம், புத்தி- முக்தி-ப்ரதாயக போன்ற கட்டுரைகள் நல்லதொரு எண்ணங்களை மனதில் விதைக்கும் வகையில் உள்ளன. ஆன்மிக ஆர்வலர்கள்  படித்துப் பரவசமடைவதோடு, பாதுகாக்க வேண்டிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →