கலைமகள்
நாம் யாரையும் வெறுக்கக்கூடாது என்பதே பகவானின் எண்ணம் என்பதை நினைவூட்டும் சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், மகா பெரியவரின் கருணை உள்ளம் குறித்து ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
கலைமகள்- பக்.224; ரூ.200.
நாம் யாரையும் வெறுக்கக்கூடாது என்பதே பகவானின் எண்ணம் என்பதை நினைவூட்டும் சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், மகா பெரியவரின் கருணை உள்ளம் குறித்து இந்திரா செளந்தரராஜன், சேஷாத்ரி ஸ்வாமிகளை மையப்படுத்தி சந்நியாசம் குறித்து நல்லி குப்புசாமி செட்டியார் ஆகிய மூவரின் எழுத்துகள் ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
மாலன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் எழுதிய சிறுகதைகள் இம்மலருக்கு தனித்துவத்தைத் தருகின்றன.
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு; ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன என்பதை பேராசிரியர் தி.இராசகோபாலனின் 'பாரதி ஒரு சொல் அலங்காரன்' கட்டுரை எடுத்துரைக்கிறது.
ஒரு நாவல், திரைப்படமாக மாற்றப்படும்போது அதன் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் காரணிகள் என்ன என்பதை ஜெ.பாஸ்கரனும், எழுத்தாளர் கல்கியின் பார்வையில் வந்தியத்தேவனின் பல பரிணாமங்களை சி.வி.சந்திரமோகனும் எடுத்தியம்புகின்றனர்.
ஆண்டாளின் வரலாறு, ஒவ்வொரு தமிழ் மாதமும் ஆண்டாள் நாச்சியாரை எவ்விதம் பெருமைப்படுத்துகின்றன - தமிழ் இதழ்கள் - காய் கனிகளில் உள்ள ஊட்டச் சத்துகள் - கவிதைகள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியும் நேர்த்தியான ஓவியங்களுடனும் வெளியாகியுள்ள இம்மலர் தீபாவளிக்கும் 91 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கும் கலைமகள் இதழுக்கும் பெருமை சேர்க்கிறது.