முகப்பு
நூல் அரங்கம்

கோபுர தரிசனம்

ஆன்மிக அருட்பிரசாதமாக மலர்ந்திருக்கிறது இந்த மலர். "கண்ணனுக்காகக் காத்திருக்கும் கோதை' அட்டைப் பட விளக்கத்தில் தொடங்கி, பக்கத்துக்குப் பக்கம் பக்தி மணக்கிறது. 

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

கோபுர தரிசனம்  - பக்.348; ரூ.200.

ஆன்மிக அருட்பிரசாதமாக மலர்ந்திருக்கிறது இந்த மலர். "கண்ணனுக்காகக் காத்திருக்கும் கோதை' அட்டைப் பட விளக்கத்தில் தொடங்கி, பக்கத்துக்குப் பக்கம் பக்தி மணக்கிறது. 

பரமாத்மாவுக்கு நடக்கும் செயல்களில் சம்பந்தமில்லை; ஆனால் ஆத்மா இல்லாவிட்டால் ஒரு காரியமுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது "தெய்வ சாட்சி' கட்டுரை.

சாத்திரங்கள் கூறும் 43 வகை தானங்களில் கோ தானம், பூமி தானம், சொர்ணதானம், அன்னதானம் ஆகியவை  சிறந்தவை. இவற்றுள் அன்னதானம் ஏன் தலையாய தானம் என எடுத்தியம்புகிறது "அன்னதானம்! அதுவே பிரதானம்' கட்டுரை.

கல்கி மறைந்த போது, கல்கி இதழில் எழுத்தாளர் சாவி எழுதிய "அவர் ஒரு அவதார புருஷன்' கட்டுரை கல்கி குறித்து ஆழமாக அறிந்துகொள்ள உதவுகிறது.
பகவான்  ஸ்ரீரமண மகரிஷி, கோகர்ணா திருக்கோயில், ராமானுஜர் தரிசனம் என இன்னும் ஏராளமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் என வாசகர்களுக்கு முழுமையான தீபாவளி விருந்து இந்த மலர்.

முழு கட்டுரையைப் படிக்க →