முகப்பு
நூல் அரங்கம்

வாழ்வியல் அறம்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

வாழ்வியல் அறம் - முனைவர் ப.செந்தில் நாயகம்; பக்.  112; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 104; 044- 2536 1039.

திருவள்ளுவரின் திருக்குறள், திருமூலரின் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள அன்புடைமையை ஒப்பீடு செய்து ஆராயப்பட்டது இந்த நூல். அன்பு, அறம், ஒழுக்கம் சார்ந்த சமூகச் சிந்தனையால் சமூக நோக்கோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இன்றைய சூழலுக்குத் தேவையான கருத்துகளை இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளுடன் நூலாசிரியர் பதிய வைத்துள்ளது பாராட்டுக்குரியது. கல்வியின் அவசியம் குறித்த கட்டுரை இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் தன்னம்பிக்கைக்கு வழிகாட்டியாகவே இந்த நூல் 
விளங்கும் என்பதில் ஐயமில்லை.

அன்பையே அனைத்துச் சமயங்களும் சிறப்பிக்கின்றன என்பதை சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறிஸ்தவம் போன்ற  சமயங்களையும் நூல்களில் இருந்து  விளக்கிய நூலாசிரியர், ஒழுக்கத்துக்கு ஆன்மிகம் அவசியம் என்பதை எடுத்துரைத்த விதம் வியக்கத்தக்கது. 

சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, கல்வி, இலக்கியம், ஆன்மிகம், தொழில் போன்றவற்றின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. தாய்- தந்தையரே முதல் ஆசிரியர், பெற்றோரே ஒழுக்கத்துக்கு அடிப்படை என்று நூலாசிரியர் விவரித்துள்ளது பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பதேயாகும்.

தன்னம்பிக்கை குறித்த பகுதியை படிக்கும்போது, சோர்ந்து கிடப்போருக்கு புத்துணர்ச்சியை ஊட்டும் என்பதில் ஐயமில்லை. வாழ்க்கையை நன்முறையில் வாழ விரும்புவோருக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →