முகப்பு
நூல் அரங்கம்

பொற்கை சுவாமி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

பொற்கை சுவாமி - சத்தியப் பிரியன்; பக். 184; ரூ.210;  சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.

திருவண்ணாமலை சித்தர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி. இங்கு சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி,  விட்டோபா சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் போன்றோர் ஆன்மிகத்தில் பெரும் பங்களிப்பை செய்துள்ளனர்.

இதில்,  'தங்கக் கை கவாமிகள்'   என்று அழைக்கப்பட்ட மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்.  அதிகம் பேசாமல். மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். அவரது இளமைப்பருவம், ஆன்மிகப் பயணம், பக்தர்களுக்கு வழங்கிய அருளாசி  சிறப்பாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அவரால் பக்தர்கள் பெற்ற நேரடி அனுபவமும் படிக்கும்போது, வியப்பையே ஏற்படுத்துகிறது.

காஞ்சி காமாட்சியின் அருளாசியில் சேஷாத்ரி சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களும் அருமையானவை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை  நூலாக எழுதும்போது அடுத்த தலைமுறைகளும் அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் என்பதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்ற நூலாசிரியரின் குறிப்பு உண்மைதான். சேஷாத்ரி சுவாமிகளோடு, அவரது சமகாலத்தவரான பகவான் ரமணர், சமகாலத்து ஞானிகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அழுக்குத் துணியோடு வலம் வந்தாலும் சித்தர்களுக்கு மக்கள் அளிக்கும் மரியாதை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அழகுத் தமிழில் எழுதப்பட்டிருப்பதும் சிறப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →