முகப்பு
நூல் அரங்கம்

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ் - எம்.எஸ்.எம். அனஸ் ; பக்.256; ரூ.260; அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்- 621310; ✆ 0433-2273444

தத்துவம் என்ற மெய்யியல் என்பது அறிவு மீதான காதல்.  அது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் ஆட்சி செய்யும் பொதுவான விதிகளைக் கொண்டிருக்கிறது.  அறிவு, விழுமியம், மனம், மொழி, அரசு போன்றவை  உள்பொருள்களாக இருக்கின்றன.  தத்துவ அறிவோ தனிமனிதரின் சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது.  கருத்தாடல், நடைமுறையும் பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது. 

சோக்ரடீஸை முன்வைத்து மெய்யியல் என்னும் பெருங்கனவை நூலாசிரியர் காட்சிப்படுத்துகிறார். இதை மெய்யியலின் கருவூலமான கிரேக்கத்தின் அறிவுப் பின்னணியிலிருந்து தொடங்குகிறார். 

வாதக் கலையின் ஆசான்களான சோபிஸ்டுகளின் விவாத முறையையும் அதன் தாக்கத்தையும் மற்றொரு இயலில் விளக்குகிறார். சமய, அரசியல் பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் இந்த நூலிலுள்ள பிற இயல்கள் பேசுகின்றன.  அவற்றில் பகுத்தறிவுவாதம், ஒழுக்கவியல், விமர்சனம் போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.  அவை அன்றாட வாழ்வில் தத்துவம் பேசும் நாகரிகம், ஆன்மாவின் இரகசியம், வாழ்க்கையின் அர்த்தம் போன்றவற்றை நாம் கற்றுக்கொள்ளத் தூண்டுகின்றன. மக்களாட்சி என்னும் செல்வந்தராட்சிக்கு எதிரான சோக்ரடீஸின் விமர்சனங்கள் இன்றைய அரசியலுக்கும் பொருத்தமானவை.  அதிகார அரசியலை முன்வைப்பதன் மூலம், நூலாசிரியர் கிளர்ச்சி மெய்யியல் சமூகத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கண்டுகொள்ள உதவுகிறார் என்பதை அறியலாம்.

தமிழ்நாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. முதல் கருணாநிதி வரை சோக்ரடீஸின் சிந்தனைகளுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை இறுதிப் பகுதி விவரிக்கிறது. அன்றாட வாழ்வில் மெய்யியல் திறனை வேண்டுவோர் வாசிக்க வேண்டிய நூல். 

முழு கட்டுரையைப் படிக்க →