முகப்பு
நூல் அரங்கம்

யுகத்தின் முடிவில்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

யுகத்தின் முடிவில் - மராத்தி மூலம்; ஐராவதி கார்வே (தமிழில்- இராசு.விவேகானந்த கோபால்); பக்.271; ரூ.150; சாகித்ய அகாதெமி, சென்னை- 18.

ஐராவதி கார்வே என்கிற மானுடவியல் பேராசிரியர் மகாபாரதத்தின் ஈர்ப்பு காரணமாக,  அதனைப் பற்றி  விரிவாக ஆராய்ந்ததாகவும், 'ஜய' என்று சொல்லப்பட்டு, பின்னர் 'மகாபாரதம்' எனப் பெயர் பெற்ற வரலாறுகள் குறித்தும், நூலின் அறிமுக உரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.

மகாபாரதப் பாத்திரங்கள் குறித்து 1964-இல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியபோது, பண்டார்கர் ஆய்வு நிறுவனம்  பதிப்பித்த மகாபாரதத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆராய்ச்சிப் பதிப்பு- சுவடிகளை ஆராய்ந்து பல கிளைக் கதைகளை நீக்கிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்பு ஆகும்.

மகாபாரதக் கதாபாத்திரங்களான காந்தாரி, குந்தி, திரௌபதி உள்ளிட்டோரின் (கதை நடக்கும் காலத்திய) மனோநிலை, அரச குடும்ப நடைமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து சில கேள்விகளையும் எழுப்புகிறார்.

பாண்டு மரணமடைந்து, அவரது உடல் எரியூட்டப்படும் போது அரசியான குந்தி உடன்கட்டை ஏறாமல் மாத்ரி ஏறியது குறித்தும் நூலாசிரியர் விவாதிக்கிறார்.

அதேபோன்று கிருஷ்ணர்- அர்ஜுனர் இருவரது தோழமையும்- அவர்களது வாழ்க்கையும் காண்டவபிரஸ்தத்தை இருவரும் சேர்ந்து தீக்கிரையாக்கியது என்று அனைத்தையும் விவரிக்கும் நூலாசிரியர் கிருஷ்ணர் தெய்வமாக்கப்பட்டது குறித்தும் தனது கருத்தைக் கூறி விவாதத்துக்குள்ளாக்கி இருக்கிறார்.

பக்தி இயக்கம் முன்னணிக்கு வந்தபோது, இதிகாசப் பாத்திரங்கள் தெய்வங்களாக்கப்பட்டன என்பது அவரது கூற்று. மகாபாரத ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ற நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →