நூல் அரங்கம்

தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்

DIN

தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் - முனைவர் பெ.சுப்பிரமணியன்;  பக்.218; ரூ.240; காவ்யா, சென்னை-24; ✆ 98404 80232.

ஆதிமனிதர்கள் வேட்டையாட சென்றபோது, தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கதைகள் வாயிலாகப் பிறருக்கு எடுத்துரைத்துள்ளனர். இதுவே நாட்டுப்புறக் கதைகளாக உருவெடுத்துள்ளன. இணைய  உலகிலும் நாட்டுப்புறக் கதைகள் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கின்றன என்பதை நூலின் வாயிலாக அறியலாம்.

நாட்டுப்புற அழகியல், பாடல் வகைகளும் இயற்கைச் சூழலும், கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தமிழ் நாட்டுப்புறக் கதைகளின் அமைப்பு முறைகள், அண்ணன்மார் சுவாமி கதைப்பாடலில் நாட்டுப்புறக் காப்பியக் கூறுகள், நாட்டுப்புற மருத்துவமும் மந்திரமும், நாட்டுப்புறக் கைவினைக் கலைகளும் சமூகமும், பழனி முருகன்  கோயிலும் கொங்கு நாட்டு மக்களும், கொங்கு நாட்டுத் திருவிழாக்கள், திருவிழாக்களும்  நாட்டுப்புற இசையும், நாட்டுப்புற இசைக்கருவிகள், தமிழும் கூத்து மரபும், ஒயில் கும்மியும் ஒயிலாட்டமும், நையாண்டி மேளமும் நாட்டுப்புற ஆட்டக்கலைகளும், திருவிழாக்கள் கள ஆய்வு முறைகளும் கள ஆய்வு அனுபவங்களும், எதிர்கால நாட்டுப்புற இயலாய்வு முறைகள் என 17 தலைப்புகளில் நாட்டுப்புற இயல் குறித்த கட்டுரைகளைப் படிக்கும்போது வியக்க வைக்கிறது. குடும்ப உறவுகள், நட்புகளோடு வாழ்க்கை, கடவுள் வழிபாடு, மருத்துவம் என்று பல்வேறு வகைகளில் நாட்டுப்புறக் கதைகளின் வாயிலாகவே தீர்வுகள் இருக்கின்றன. 

பழனி முருகன் கோயில் திருவிழா வழிபாடுகள், பிரார்த்தனைகள், நாட்டுப்புற ஆட்டங்கள் குறித்து விவரிப்பது அருமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT