முகப்பு
நூல் அரங்கம்

காந்திய வழியில் அமைதிக் கல்வி

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

காந்திய வழியில் அமைதிக் கல்வி - சொ.செண்பகவல்லி; பக். 166; ரூ.200; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; 

சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளுக்கு இடையே மகாத்மா காந்தி தன்னுடைய ஆதாரக் கல்விக் கொள்கைகளை தன்னுடைய ஆஸ்ரமங்களில் சோதனைக்கு உள்படுத்தினார். இவரது மறைவுக்குப் பின்னர், விநோபா பாவேவும் வலியுறுத்த, ஆனால் அந்தக் கொள்கை நாட்டில் ஏற்கப்படவில்லை. இருப்பினும், தனியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றில் இந்தக் கல்விக் கொள்கை ஏற்கப்பட்டு, நடைமுறையிலும் உள்ளது. இந்தக் கல்விக் கொள்கையை பற்றி, 6 அத்தியாயங்களில் இந்த நூல் விவரிக்கிறது. 

அமைதிக் கல்வியின் இன்றைய அவசியம்,  அமைதிக் கல்வியின் பரிணாம வளர்ச்சி,  காந்திய கல்வி முறையின் வரலாறு,  காந்திய கல்வி முறையின் அடிப்படைக் கொள்கைகள், விநோபாவின் கல்விச் சிந்தனைகளும் முயற்சிகளும்,   சென்னை காந்தி அமைதி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட களப் பணிகள் என்ற தலைப்புகளில் நூலில் அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
'இன்றைய மாணவன்- நாளைய தலைவன்' என்பதற்கிணங்க, நல்லதொரு தலைமுறை  படிக்கும் பருவத்திலேயே  உருவாக வேண்டியது அவசியம் என்பது இந்த நூலைப் படிக்கும்போது, தெளிவாகிறது. 

அமைதியைத் தேடும் ஆசிரியர்களுக்கும், வன்முறையில்லா கல்வி நிலையங்களை உருவாக்க முயலும் கல்வியாளர்களுக்கும் இந்த நூல் சரியான வழிகாட்டி.
 

முழு கட்டுரையைப் படிக்க →