வரம் தரும் ஆலயங்கள்
வரம் தரும் ஆலயங்கள் - கே. இளந்தீபன் (பதிப்பாசிரியர் : தி.திருநாவுக்கரசு); பக். 192; ரூ.500; திருச்சிற்றம்பலம் புத்தகாலயம், கும்பகோணம்; 9488422505.
தினமணி கதிர் பகுதியில் வந்த ஆன்மிகத் தொடரை 77 தலைப்புகளில் தொகுத்து அளித்துள்ளார். இறைவன் பல்வேறு பகுதிகளில் வீற்றிருந்து நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார். பக்தர்களின் முக்கிய வேண்டுதல், எந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பவற்றை நூலாசிரியர் விரிவாக எழுதியுள்ளார்.
உதாரணமாக, மாணவர்கள் கண்டியூர் சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல், செல்வம், சந்தோஷ வாழ்வு, கடன் தீர்க்கும் சிவன், தங்கம் தரும் ஈசன், புது வீடுகட்ட அருளும் திருப்புகலூர் சிவன், இதயநோய் தூர்க்கும் நெய்த்தான் சிவன்... என்று பட்டியல் நீள்கிறது.
பக்தர்கள் பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு வழிபட வேண்டிய கோயில்களை பற்றி அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
இவைதவிர, பரிகாரக் கோயில்கள் எந்தெந்த ஊரில் உள்ளது, செல்வது எப்படி?, வழிபடும் முறை உள்ளிட்ட தகவல்கள் விரிவாக உள்ளதைக் காணும்போது, எவருடைய துணையும் இன்றி நூலை வழிகாட்டியாகவே கொண்டு சென்று தரிசிக்கும் விதத்தில் உள்ளது.
ஆன்மிக நூலாக, வழிகாட்டி நூலாக சிறப்புற விளங்குகிறது. ஆன்மிக ஆர்வலர்கள் அவசியம் படித்து பாதுகாக்க வேண்டிய நூல் இது.