முகப்பு
நூல் அரங்கம்

கலகப் புத்தகம்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

கலகப் புத்தகம் - நிவேதிதா லூயிஸ்; பக்.168; ரூ.195; கிழக்கு பதிப்பகம்,  சென்னை - 14; ✆ 044-42009603.

அநீதிக்கு எதிராகப் போராடும் குணம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற பொதுவான கருத்தை மறுப்பதோடு மட்டுமல்லாது, மறக்கப்பட்ட, மூடி மறைக்கப்பட்ட பெண் சாதனையாளர்களை வெளிச்சம் போட்டு காட்டி, அச்சாதனையாளர்களுக்கு ஆதரவாக காத்திரமான கருத்தை வரலாற்றிலிருந்து ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது 'கலகப் புத்தகம்'.

புத்தர், இயேசு, காந்திஜி, சேகுவேரா உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் செய்த சேவைகள், சாதனைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல, பெண்கள் செய்த சாதனைகள் என்ற உண்மையை இந்நூல் உணர்த்துகிறது.

விக்டோரியா ராணிக்கு சவால்விட்ட இந்திய அரசி பேகம் ஹஸ்ரத் மஹல், சென்னையில் முதல் திரையரங்கை நிறுவிய ஃப்ரீடா குளூக், டைட்டானிக் கப்பலில் இருந்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றியதோடு மட்டுமல்லாது பாதிக்கப்பட்டோருக்கு கடைசி வரை துணை நின்ற மார்கரெட் டோபின், உலகின் முதல் பெண் துப்பறிவாளர் நெல்லி பிளை, ஐன்ஸ்டீனைவிட அறிவாளியான மிலெவா உள்ளிட்ட 25 ஆளுமைகள்,  அவர்கள் பெண், எளியவர்கள் என்பதாலேயே வரலாற்றின் வெளிச்சத்திலிருந்து மறைக்கப்பட்டனர்.

மறைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து பதிவு செய்துள்ள நூலாசிரியரின் உழைப்பு அபாரமானது.  நெருக்கடியான சூழலில் நீதியின் பக்கம் நின்று தன் கடமையைச் செய்த பெண்கள் குறித்து சமூக இயக்கங்கள், அரசியலில் ஈடுபடுவோர் மட்டுமல்லாது மாணவர்களும் அறிந்து கொள்வது அவசியம்.

முழு கட்டுரையைப் படிக்க →