டிகான்கோ கிராமப் பண்ணையில் கழித்த மாலைப் பொழுதுகள்
கோகல் எழுதிய பிற நூல்களையும் வாசித்துவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவதில் இந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது.
டிகான்கோ கிராமப் பண்ணையில் கழித்த மாலைப் பொழுதுகள் (ரஷிய சிறுகதைகள்) - நிகோலாய் கோகல் (தமிழில் - வானதி); பக். 312; ரூ.350; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.
டால்ஸ்டாய், தாஸ்தா யெவ்ஸ்கி, செகாவ் போன்ற ரஷிய எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழில் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் வராத ரஷிய கதைகள் என்ற வகையில், ரஷிய எழுத்தாளரான நிகோலாய் கோகலின் கதைகளை மொழிபெயர்த்துள்ளார் நூலாசிரியர்.
ரஷிய இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் கோகல். உக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த இவர் 1809-1852 காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
அவரது ஆரம்பகால படைப்புகள் உக்ரேனிய கலாசாரம், நாட்டுப்புறக் கதைகளின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த நூலில் உள்ள சிறுகதைகளும் அவர் ஆரம்ப காலத்தில் எழுதியவையே.
இந்தக் கதைகள் நிகழ்ந்த காலகட்டத்தில் உக்ரைன், ரஷிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது, ரஷிய கிராமங்களில் நிகழும் சடங்குகள், திருவிழாக்கள், கிராம மக்களின் பாரம்பரிய வழக்கங்கள், கடவுள்- சாத்தான் குறித்த நம்பிக்கைகளை மாயப் புனைவுடன் கதைகளாக படைத்துள்ளார் கோகல்.
சோரோசின்ஸ்க் திருவிழா, புனித யோவான் தின மாலை, மே மாத இரவு அல்லது நீரில் மூழ்கிய பெண், தொலைந்த கடிதம், கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் உள்ளிட்ட 8 கதைகள் அடங்கியிருக்கின்றன.
வாழ்வை அப்படியே எழுதியவராக அறியப்படுகிறார் கோகல். நேர்த்தியான தமிழ் மொழிபெயர்ப்பில் அந்த அனுபவம் சிறிதும் குறைவின்றி கிடைக்கிறது. கோகல் எழுதிய பிற நூல்களையும் வாசித்துவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவதில் இந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது.