வைகறை வாழ்த்துகள்
படிப்பவருக்கும் உற்சாகம் ஏற்படும் விதத்தில் நூலாசிரியரின் சிந்தனைகள் அமைந்துள்ளன.
வைகறை வாழ்த்துகள் - வெ. இறையன்பு; பக்.136; ரூ.130; கற்பகம் புத்தகாலயம், சென்னை - 17; ✆044-24314347.
அதிகாலையில் எழுந்ததும் நாம் கண் விழிப்பது கைப்பேசியின் தொடுதிரையைப் பார்த்துதான் என்றால் அது மிகையில்லை எனும் அளவுக்கு கைப்பேசிகளின் ஆதிக்கம் காலை முதல் இரவு உறங்கச் செல்லும் வரை கோலோச்சுகின்றன.
நாம் விரும்பினாலும், விரும்பாவிடிலும் பல்வேறு தகவல்கள், செய்திகள், காணொலிகளை நமது உள்ளங்கையில் கைப்பேசிகள் திணித்து விடுகின்றன. இது பல நேரங்களில் சலிப்பு, அலுப்பை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் சில குறுஞ்செய்திகள் புத்துணர்ச்சி அளிப்பதாகவும், மனதுக்கு உத்வேகம் ஊட்டுவதாகவும் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியான பல குறுஞ் செய்திகளைக் கொண்ட தொகுப்புதான் இந்நூல்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான நூலாசிரியரின் சிந்தனையில் உதித்த இக் குறுஞ்செய்திகளே அவரது இருப்புக்கு அடையாளம் ஆகிப் போனது என்று அவர் குறிப்பிடுவதிலிருந்தே இந்நூல் வெளிப்படுத்தும் கருத்துகளின் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அதிகாலையில் எழுந்ததும் கைப்பேசியில் ஆங்கிலத்தில் 'குட் மானிங்' என்று வாழ்த்துத் தெரிவித்து பிறருக்கு அனுப்புவதற்குப் பதிலாக, இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் குறுஞ்செய்திகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனுடன் 'இனிய காலை வணக்கம்' என்பதையும் சேர்த்து அனுப்பினால் குறுஞ் செய்திகள் ஒவ்வொன்றும் அருஞ் செய்திகளாகும்.
அதைப் படிப்பவருக்கும் உற்சாகம் ஏற்படும் விதத்தில் நூலாசிரியரின் சிந்தனைகள் அமைந்துள்ளன.