உயிர் - ஓர் அறிவியல் வரலாறு
வாசித்து பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய நூல் இது.
உயிர் - ஓர் அறிவியல் வரலாறு - நன்மாறன் திருநாவுக்கரசு; பக். 192; ரூ.225; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; 044-42009603.
விண்மீன், கோள்கள், பால்வெளி என வெளிப்புறமாக விரிவடையும் அதிசயம் ஒருபுறம். அணுக்கள், எலக்ட்ரான், புரோட்டான், அணுத்துகள் என உள்நோக்கி விரிவடையும் அதிசயம் மற்றொருபுறம். இவ்விரு அதிசயங்களுக்கு நடுவில் இயங்கும் உலகின் மகா அதிசயத்தை இந்நூல் விவரிக்கிறது.
ஒரு நட்சத்திரத்தின் அழிவில் இருந்தே பூமியும், பூமியில் உயிரின் வரலாறும் தொடங்கியது என்றும், பூமியில் மட்டும் 87 லட்சம் வகை உயிரினங்கள் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் கூறுவதன் பின்னணியை இந்நூல் அலசுகிறது.
மிகப் பெரிய திமிங்கலம் முதல் கண்ணுக்கே தெரியாத வைரஸ் வரை ஒவ்வோர் உயிரினமும் எங்கிருந்து பூமிக்கு வந்தன?, எவ்வாறு இயங்குகின்றன? என்பன அவற்றை இயக்கும் சக்தி எது?, உயிரினம் தன்னிச்சையாக தோன்ற முடியுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்நூல் தக்க சான்றுகளுடன் விடை பகிர்கின்றது.
அத்தனை உயிர்களுக்கும் அடிப்படையான ஆரம்ப உயிர், எப்படி பலதரப்பட்ட உயிர்களாகப் பரிணமித்தன என்பதை வேதியியல் மாற்றங்கள், டி.என்.ஏ., மெண்டலின் பட்டாணிச் செடி ஆய்வு, மரபணுவியல், டார்வின், லாமெர் ஆகியோரின் பரிணாம கோட்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒவ்வோர் அத்தியாயத்திலும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
மீன்பிடி தடைக்காலம் ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது; ஹெச்ஐவி வைரஸின் தோற்றுவாய் எவ்வாறு கண்டறியப்பட்டது; புல்வெளி மறைந்து பாலை நிலங்கள் எப்படி உருவாகின என்கிற தகவல்கள் உயிரியல் ஆச்சரியம் என்றால், அவை டார்வினின் பரிணாம கோட்பாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருப்பது அதைவிடப் பேரதிசயம்! வாசித்து பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய நூல் இது.