முகப்பு
நூல் அரங்கம்

உதயபானு கான்மலர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை உணரக் கூடிய வகையில் அமைந்த எழுத்து நடை. சரித்திர, நாவல் ஆர்வலர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:11 PM
பகிர்:

உதயபானு கான்மலர் - கோகுல் சேஷாத்ரி; பக். 512; ரூ.410; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-600 014; ✆ 044- 4340 8000.

கதாசிரியர் மென்பொருள் துறையில் பொறியாளர். 2008-ஆம் ஆண்டு முதல் இந்த நாவலை தொடர்ந்து எழுதி இப்போது ஆறாம் பாகமாக இந்த நூல் வந்திருக்கிறது. முன்கதை இந்த நூலின் முற்பகுதியில் முதல் ஐந்து பாகங்களின் கதைச்சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆதித்த சோழர் காலத்தில் சேரர்களுக்கு இடையே இருந்த நெருக்கம், வணிகப் போட்டியால் கசந்த விதம் விவரிக்கப்பட்டிருக்கிறது.

சோழர்களால் விரட்டப்பட்ட பாண்டியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் சேரர்கள் என்று புதிய கூட்டணி உருவாகிறது. ஒட்டுமொத்த கதையிலும்- அரசியல் உறவுகள், பகை, ஐந்திணைகளின் வழிப்பயணங்கள், ராஜதந்திர அணுகுமுறை, நிர்வாக முறை, நகரமைப்பு, வீரமாந்தர்களின் குணங்கள், சோழ-பாண்டிய இருவேறு துருவங்களின் செயல்பாடுகள், அவர்களின் வாழ்க்கை யாவும் கல்வெட்டுச் செய்திகளின் ஆதாரத்தைக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.

Advertisement

ஆதித்த கரிகாலனின் படுகொலையைப் பற்றி பேசும் காட்டுமன்னார்கோவில் உடையார்குடிக் கல்வெட்டு, சேரர் கோட்டையினை அறிய ராஜராஜ சோழரின் மெய்க்கீர்த்தி, வீரபாண்டிய சரித்திரம் கூறும் ஆனையூர்க் கல்வெட்டு, சுந்தரபாண்டிய ஈச்சுரமும் கல்வெட்டு ஆதாரம் கொண்டதே.

சோழர் கதை பின்னணியாக இருந்தாலும் பாண்டியர்கள், சேரர்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்படுகிறது.

சரித்திரம் தொடர்பான நாவல்களை எழுதுவதில் 'ராஜகேசரி', 'பைசாசம்' தொடங்கி ஆசிரியர் 20 ஆண்டுகளாக எழுத்துலகில் இருந்து வருவது நூலின் வாயிலாக அறிய முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை உணரக் கூடிய வகையில் அமைந்த எழுத்து நடை. சரித்திர, நாவல் ஆர்வலர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments