திரைகடல் ஓடு, திரவியம் தேடு
மேம்படுத்துவது தொடர்பான ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.
திரைகடல் ஓடு, திரவியம் தேடு, இயகோகா சுப்பிரமணியம்; பக்.184; ரூ.180; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 24353742.
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நூலில், அனுபவத்தைப் பெற்றவர்கள் தெரிந்து வைத்துள்ளதை எளிமையாகவும், மனதில் நிற்கும் வகையிலும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
சரியான முறையில் கணக்குகள் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம்; அரசின் சட்டத் திட்டங்களை அறிந்து அதன்படி செயல்படுதல்; தரமான மூலப் பொருள்கள், இயந்திரங்களைக் கையாளுதல்; பொறுப்புணர்வோடு செயல்படுதல்; எடுத்தவுடன் அகலக் கால் வைக்காமல் தனது வசதிகளுக்கான அளவில் செயல்படுதல் ஆகியன அனைத்து தொழில்களுக்கும் தேவை என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தொழில்முனையும்போது அரசியல், சமுதாய, தொழில் அமைப்புகளால் ஏற்படக் கூடிய சிரமங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்; கவனமுடன் செயல்பட வேண்டும் என கூறுவது இளம் தொழில்முனைவோருக்கு பாடமாக அமையும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வணிகம் செய்வதற்கான வழிமுறைகள், மொழி அறிவு, மதங்களை மதிக்கும் பண்புகள், திட்டமிட்டு செயலாற்றுதல் என முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்துக் கருத்துகளும் ஒன்று திரட்டி தரப்பட்டுள்ளது.
மணித்துளியின் மதிப்பு, திறந்த புத்தகமாக இருங்கள், காலம் நிச்சயம் மாறும், காவிரி அட்லாண்டிக்கில் கலக்காது, பாடம் சொல்லும் பாரம்பரியம், சிக்கனம் தேவைப்படும் காலம்,
மகுடத்தில் வைரம் என முதல் அத்தியாயம் முதல் 26-ஆவது அத்தியாயம் வரை தொழில் தொடங்குவது, மேம்படுத்துவது தொடர்பான ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. புதிய பாதையை இந்த நூல் அமைத்துத் தரும்.