முகப்பு
நூல் அரங்கம்

ஸ்ரீ விஷ்ணு புராணம்

பக்தி மார்க்கத்திலும் ஹிந்து மரபு நூல்களிலும் ஈடுபாடு உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

ஸ்ரீ விஷ்ணு புராணம் - வேங்கடவன்; பக்.120; ரூ.120; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை- 17; ✆044-24331510.

பதினெட்டு மகாபுராணங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது வியாசர் இயற்றிய விஷ்ணு புராணம். சர்கம் (பிரபஞ்ச உற்பத்தி), பிரதிசர்கம் (பிரளயத்துக்குப் பிறகு மீண்டும் பிரபஞ்ச உற்பத்தி), வம்சம் (தெய்வீக, மன்னர் வம்சங்களைக் குறித்த விவரங்கள்), 'மன்வந்தரம்' என்னும் 18 மனுக்களின் முழு ஆட்சி சரித்திரம், வம்ச அனுசரிதம் (சூரிய-சந்திர வம்சங்களைச் சேர்ந்த அரசர்களின் வம்சம்) என புராணங்களுக்கு உரிய பஞ்சலட்சணங்களை முழுமையாகக் கொண்டுள்ளது இது.

நான்கு வேதங்களின் தொடக்கம், வியாசர் வேதங்களைத் தொகுத்தது, பிரகலாத சரித்திரம், துருவ வம்ச சரித்திரம், கிருஷ்ணரின் சரித்திரம், கலியுக முடிவு உள்ளிட்டவை அடங்கியது விஷ்ணு புராணம்.

புராண ரத்னம் என்று அறியப்படும் இதில் 23,000 ஸ்லோகங்கள் இருந்ததாக, பிற்பட்ட நூல்களிலிருந்து தெரியவருகிறது. எனினும் சுமார் 6,000 முதல் 8,000 வரையுள்ள பல்வேறு தொகுப்புகள் நமக்கு கிடைத்துள்ளன.

இந்தப் புராணத்தை எளிய தமிழில் சுருக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுருக்கம் என்றாலும்கூட, முக்கிய பகுதிகள் அனைத்தும் இடம் பெற்று, இதனை முழு வடிவில் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது.

பக்தியை ஊக்கப்படுத்தி ஹிந்து நெறியில் நம்மை செம்மையாய் வழிநடத்த உருவானவையே புராணங்கள். வேங்கடவனின் விஷ்ணு புராணம் நூல் இதனை முழுமையாக நிறைவேற்றுகிறது. பக்தி மார்க்கத்திலும் ஹிந்து மரபு நூல்களிலும் ஈடுபாடு உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →