முகப்பு
நூல் அரங்கம்

சிப்பாயி (களவு போன கதை)

சிப்பாயி, பட்டுக்கட்டி எனும் இரண்டு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சிப்பாயி (களவு போன கதை) - மு.ராஜேந்திரன்; பக். 176; ரூ.220; அகநி வெளியீடு; வந்தவாசி-604408;✆ 944360421.

'காலாபாணி' நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூலாசிரியரின் இத்தொகுப்பில் சிப்பாயி, பட்டுக்கட்டி எனும் இரண்டு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன.

வடகாடு நாட்டாமையின் சிப்பாயி, காரிக்காளை எனும் இரண்டு காளை மாடுகள் திருட்டுப் போவதும், அவை மீண்டும் நாட்டாமைக்கு கிடைத்தனவா என்பதும்தான் சிப்பாயியின் கதை. நாட்டாமையின் வேலையாள் உருளக்கட்டை காளைகளைப் பற்றிய துப்பு கிடைக்குமா என காரியாபட்டி சந்தைக்குச் செல்வதில் தொடங்கும் கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ராத்தொழில் (இரவு நேரத்தில் மாடுகளை திருடச் செல்வது) செய்பவர்களின் கைவரிசைதான் என்பதை அறிந்துகொண்டதும், மாடுகளை மீட்பதற்காக நாட்டாமை படிப்படியாக அவர்களை நெருங்குவது, ராத்தொழிலில் ஈடுபடும் கட்டாக்காளை, ஏழப்பன் ஆகியோருக்கு நேர்ந்த கதி என 1950-களின் கிராம வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது நாவல். திருட்டுப்போன சிப்பாயி எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என்கிற ஏக்கம் நாட்டாமை குடும்பத்தினரைப் போல நமக்கும் ஏற்படுகிறது. இறுதியில் சிப்பாயிக்கு ஏற்படும் முடிவு மனதை கனக்கச் செய்கிறது.

மற்றொரு குறுநாவலான 'பட்டுக்கட்டி'- பட்டுக்கட்டி மூப்பனார் என்ற கதாபாத்திரத்தின் வாழ்வை மையமாக வைத்து எழுதப்பட்டது. அவரது பனங்காட்டை பார்த்துக் கொள்வதற்காக அமர்த்தப்பட்ட தாணுமாலையனின் மகள் தெய்வானை நாவலில் முக்கிய கதாபாத்திரம். ஊர்ப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் பட்டுக்கட்டியும், அரசியல் போதையில் தறிகெட்டு திரியும் அவரது மகன் புலிக்குட்டியும் இரு துருவங்கள். சிப்பாயி நாவலின் சிப்பாயி காளையைப்போன்று, தெய்வானையின் இறுதி முடிவும் நடுக்கத்தைத் தருகிறது. இரு குறுநாவல்களும் மனதில் கனமான மௌனத்தை ஏற்படுத்துகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →