முகப்பு
நூல் அரங்கம்

தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர்

நூல் நெடுகிலும் ஏராளமான தகவல்களுடன் நாவுக்கரசரின் தமிழின் சிறப்பும் எடுத்துக்காட்டப்படுகிறது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர் - பழ. நெடுமாறன்; பக். 116; ரூ. 150; பாளை சைவ சபை, 48, பெருமாள் தெற்குத் தேர்த் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002.

பெரும்பாலும் அரசியல் தலைவராக மட்டுமே அறியப்பட்டுள்ள பழ. நெடுமாறன், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்ல, இலக்கியம், சமயம் எனப் பிற துறைகளிலும் ஆழங்காற்பட்டவரும்கூட என்பதை வெளிப்படுத்துகிற ஆய்வு நூல் இது.

திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்களையும் அவர் தொடர்பான சேக்கிழாரின் பெரியபுராணம் போன்றவற்றையும் தீர ஆய்ந்தறிந்து தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர் என்ற அழுத்தமான சித்திரத்தைத் தந்துள்ளார் அவர்.

தமிழ் மொழி பேசியவர்கள் தமிழ் மக்கள் என்றழைக்கப்பட்டுவந்த காலத்தில் ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர்தான் தமிழைப் பேசுபவன் தமிழன் என்கிற சொல்லாட்சியை அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் கவனத்துக்குரியது.

பிராகிருதத்தை சமணமும் பாலியை புத்தமும் சம்ஸ்கிருதத்தை வைதிகமும் உயர்த்திக் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், ஆழ்வார்களும் நாயன்மார்களும் எவ்வாறு தமிழைப் பாடி, தமிழால் பாடி, தமிழர்களைத் தட்டியெழுப்பினர் என்பது பற்றிய வரலாற்றையும் தேர்ந்தெடுத்த பாடல் வரிகளுடன் விவரிக்கிறார் ஆசிரியர்.

மக்களிடமிருந்த வேறுபாடுகளைக் களையும் நோக்கில், சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் என்ற நாவுக்கரசரின் வரிகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

நூல் நெடுகிலும் ஏராளமான தகவல்களுடன் நாவுக்கரசரின் தமிழின் சிறப்பும் எடுத்துக்காட்டப்படுகிறது.

'நாவலந்தீ வகத்தினுக்கு நாதரான காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவ மலோம் கடுமையொடு களவற்றோமே' என்ற பாடலின்வழி மன்னர் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த நாவுக்கரசரால் பல்லவ மண் முழுவதும் எவ்வாறு சைவத்துக்கு மாறியது என்பதும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பக்தி இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் அள்ள அள்ளக் குறையாத தமிழ்ச் செல்வம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் இதுபோன்ற எளிய நூல்கள் இன்னும் பல வர வேண்டும் என்பதற்கான முன்னத்தி ஏர் இந்த நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →