உடல், உயிர், உதிரம்
இந்நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூலாகும்.
உடல், உயிர், உதிரம் - எஸ்.அமுதகுமார்; பக்.200; ரூ.200; அபிநயா பிரசுரம், சென்னை-17; ✆9791071218.
மருத்துவரான நூலாசிரியர், அவர் மருத்துவ மாணவராக இருக்கும்போதே நூற்றுக்கணக்கான மருத்துவ ஆளுமைகளை நேர்காணல்கள் மூலமாகவும், மருத்துவ ஆளுமைகளை பிறரைச் சந்திக்கச் செய்து அப்போது நடந்த உரையாடல்களின் அடிப்படையிலும் பத்திரிகைகளில் எழுதி வந்தார். மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா- டாக்டர் விஜயலட்சுமி (போரன்சிக்துறை) சந்திப்பு உரையாடல் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும் தினமணி-கொண்டாட்டத்தில் 71 வாரங்களாகத் தொடராக வெளிவந்தவை. அவற்றின் 36 கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுதி 'இரத்தம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இது இரண்டாவது தொகுதி.
ஈறுகளில் ரத்தக் கசிவு, ரத்தக் கொதிப்பு, ரத்தத்தின் தூய்மைத்தன்மை, ரத்தநாளத்தின் அவசியம், தலைவலி, உடலின் அனைத்து பாகங்களிலும் ஏற்படும் வலிகள், ஆக்ஸிஜனின் அவசியம் என மனித உடலில் தோன்றும் பல்வேறு உபாதைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. உடலில் ரத்தம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது விளக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும் கூறப்படும் விஷயங்கள் தொடர்பான சம்பவங்களையும் கூறியிருப்பது நூலைச் சுவையாக்குகிறது. ஒவ்வொரு உபாதையிலிருந்தும் விடுபடுவதற்கான பாதுகாப்பு யோசனைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
விரல்ரேகை ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமாக இருப்பதைப் போலவே பல்வரிசையும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பன போன்ற சுவையான தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூலாகும்.