மரியா மாண்டிசோரி காணும் குழந்தை மாண்பு
குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் சிறந்த நூல்.
மரியா மாண்டிசோரி காணும் குழந்தை மாண்பு - ஆர்.லட்சுமி ; பக்.200; ரூ.200; முல்லை பதிப்பகம், சென்னை-40; 9840358301.
மரியா மாண்டிசோரி குழந்தைகளுக்கான புதிய கல்விமுறையை உருவாக்கியவர். ஆனால், அந்தக் கல்விமுறையை உருவாக்க குழந்தைகளிடம் இருந்தே அவர் நிறையக் கற்று கொண்டிருக்கிறார் என்பதை இந்நூலின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
குழந்தைகள் சுதந்திரமாக தமது அறிவாற்றலை, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதே மாண்டிசோரி கல்வித் தத்துவத்தின் அடிப்படையாகும்.
குழந்தைகளின் ஐம்புலன்களுக்கும் பயிற்சி தரும் கருவிகள் மூலம் அவர்கள் செய்யும் சிறிய சிறிய செயல்களால் அவர்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொண்டு உயர்வடைவதற்கான வழிமுறையாகும். குழந்தை நடப்பதும், குதிப்பதும், ஓடுவதும், ஆடுவதும், பொருள்களை உடைப்பதும் குழந்தை மனிதானவதற்காக படும்பாடுதான். கண் பார்த்ததை கை செய்கிறது என்பதைத்தான் குழந்தைகள் செய்கின்றன என்று கூறும் நூலாசிரியர், குழந்தைகளிடம், 'அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே' என்று கூறி அவர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதை விளக்குகிறார்.
முதலாவது விளையாட்டு, பிறகு வேலை - இவ்விரண்டும் குழந்தை மனிதனாக உதவுகின்றன. குழந்தை கருவில் உருவாகும்போதே கல்வியைத் தொடங்கலாம் என்பதும், வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் அதி ஜாக்கிரதையாக இயற்கை கல்விக்குரிய சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் குழந்தை அற்புதமாகத் தன்னை வெளியிட்டுக் கொள்ளும் என்பதும் மரியா மாண்டிசோரியின் சித்தாந்தம் என்பதை நூல் விளக்குகிறது. மரியா மாண்டிசோரியின் வாழ்கை நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் சிறந்த நூல்.