நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
வித்தியாசமான நிகழ்வுகளின் தொகுப்பைப் படிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த நூல்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே - தொகுப்பாசிரியர்: அசோகன் நாகமுத்து; பக்.160, ரூ.200, அந்திமழை, சென்னை-87; ✆99524 44540.
புத்தகத்தின் தலைப்பே கவித்துவமாக இருக்கிறது. அதில் பொருளும் புதைந்துள்ளது. ஆம், நிற்பன, நடப்பன, பறப்பன என அனைத்து வகை கால்நடைகள் பற்றிய அனுபவ நிகழ்வுகளின் தொகுப்புதான் இது. கால்நடை மருத்துவர்களின் அனுபவங்களையும், கால்நடைகளுக்கு அளித்த சிகிச்சைகள் மற்றும் அதையொட்டி நிகழ்ந்த விறுவிறுப்பான நிகழ்வுகளின் தொகுப்பும் ரசிக்கும்படி தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.
கால்நடை மருத்துவர்கள் தங்களுக்கு நேர்ந்த கால்நடை மருத்துவ அனுபவங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுத்தியுள்ளனர். மொத்தம் 23 தலைப்புகளில் கால்நடை மருத்துவர்களின் அனுபவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆடுகளின் இறப்புக்கு ஒரு செடி தான் காரணம் என்பதை ஆடுகள் இறந்த இடத்தில் நின்ற விஷச்செடியை பார்த்ததுமே முடிவுக்கு வந்து விசாரணையை நிறைவு செய்த மருத்துவரின் அனுபவம், தூக்கத்தில் நடந்து சென்று நாயை மிதித்து கடிவாங்கியவரின் பரிதவிப்பு, பூனைக்குட்டிக்கு பல பத்து ஆண்டுகளுக்கு முன்பே கரோனா நோய் தாக்கம் இருந்ததைக் கண்டுபிடித்து அப்போதே ரெம்டெசீவர் மருந்து கலவையைக் கொடுத்தது, கோழி பண்ணைகளில் கோழிகள் இறப்பு பிரச்னை என பல ருசிகரமான அனுபவங்களைப் படிக்கப் படிக்க சுவாரஸ்யம் ஏற்படும்வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக்கொண்ட அனுபவம் ரசிக்கத் தகுந்தது. வித்தியாசமான நிகழ்வுகளின் தொகுப்பைப் படிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த நூல்.