மகானின் மகிமைகள் (ஸ்ரீராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு)
ராகவேந்திரரை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், அவரின் பக்தர்களுக்கும் இந்த நூல் ஒரு பிரசாதம்.
மகானின் மகிமைகள் (ஸ்ரீராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு) - காந்தலக்ஷ்மி சந்திரமெளலி; பக்.192; ரூ.240; அருணோதயம் வெளியீடு, சென்னை-14; ✆ 93634 50177.
ஆன்மிகம் சார்ந்த அதுவும் பெரிய மகான்களின் வரலாற்றைப் புத்தகமாய் வெளியிட பரந்த ஞானமும், உண்மையும் அவசியம். அந்த வகையில் ஸ்ரீராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான மகானின் மகிமைகள் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் காந்தலக்ஷ்மி சந்திரமெளலி சிறப்பாகப் படைத்துள்ளார். இதுபோன்ற நூல்களை எழுத சற்று பிரயத்தனம் செய்ய வேண்டும். அது நூலில் தெரிகிறது.
''ஞானிகள் என்னுடைய தூய வடிவம், எனவே நீங்கள் அவர்களை வணங்கினாலே என்னை வணங்குதல் போலாகும்'' என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். "நாம் கடவுள் தன்மை அடையலாமே தவிர கடவுளாக முடியாது' என்கின்ற உண்மையை மகான் ராகவேந்திரரின் " மத்வ சித்தாந்த விளக்கம்' சொல்கிறது. இந்த தத்துவம் யதார்த்த உண்மை.
ஸ்ரீராகவேந்திரரின் ஜனனம், குருகுலவாசம், திருமணம், மடாதிபதியாதல், மற்றும் பல்வேறு தலைப்புகளில், நிகழ்வுகளை தெளிவாகவும், படிக்க ருசிகரமாகவும், பரவசமாகவும் தந்துள்ளார் நூலாசிரியர்.
குறிப்பாக பிருந்தாவன பிரவேசம் பற்றிய பகுதி தத்ரூபமாக உள்ளது. நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. ராகவேந்திரரை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், அவரின் பக்தர்களுக்கும் இந்த நூல் ஒரு பிரசாதம்.