நூல் அரங்கம்

உளவுக்கு 1000 கண்கள்

DIN

உளவுக்கு 1000 கண்கள் - நந்தன் மாசிலாமணி; பக்.272; ரூ.265; குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை-10; தொலைபேசி எண் 2642 6124/45919141.

ஹிலாரி கிளிண்டனின் 'ஹார்ட் சாய்ஸ்' நூலில் வரும் சம்பவம் தமிழகத்தில் நடந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும், அது எப்படி எதிரொலிக்கும் என்று 'குமுதம் ரிப்போர்ட்டர்' இதழில் வெளியான தொடர்கதையின் தொகுப்பே இந்த நூல்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணைதூதரகத்தில் சீனாவைச் சேர்ந்த ஒருவன் அடைக்கலம் அடைகிறான். அதை அங்கு காவலில் இருந்த ஒரு காவலர்

விடியோவாகப் பதிவு செய்ய, அது புலனாய்வு இதழில் செய்தியாக உலக அரங்கில் ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கிறது.

இந்த நாவலில் ஒரு நாட்டில் தூதரகத்தின் பணி, மாற்று நாட்டுக்கு செல்லும் தூதருக்கான விதிமுறை ஆகியவற்றை ஆசிரியர் நுட்பமாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு நாட்டின் உளவுத் துறையும் எப்படி செயல்படுகிறது என்பதையும் இந்த நாவல் விளக்குகிறது.

குறிப்பாக, அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையேயான உறவு, இந்தியாவின் சர்வதேச நிலைப்பாடு, இன்றைய உலக நாடுகள், எதிரி நாடுகளால் உண்டாக்கப்படும் பிரச்னைகள், அதனால் உலக வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்பு என உலக அரசியலை எளிமையாக விவரித்துள்ளார்.

சர்வதேச அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அனைவரும் வாசிக்கும் வகையில் விறுவிறுப்பான நடையில் அமைந்துள்ள 'உளவுக்கு 1000 கண்கள்' (முதல் பாகம்) புலனாய்வு இதழில் தனித்த இடத்தைப் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT