முகப்பு
நூல் அரங்கம்

வாழ்வியல் நெறிகள்

Updated On : 8 ஜனவரி, 2024 at 3:45 PM
பகிர்:

வாழ்வியல் நெறிகள் - ம. வின்சென்ட் அமல்ராஜ், பக்.192; ரூ.150, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 94440 47790.

பள்ளித் தாளாளரான நூலாசிரியர் தனது வாழ்வியல் அனுபவங்களை திரட்டி தன்னம்பிக்கை நூலாகப் படைத்துள்ளார். ஒருவரின் வெற்றி, தோல்வி குறித்த அனுபவம் எதிர்காலச் சந்ததிக்கு வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்க உதவும் பரிசாக அமைகிறது. அந்த வகையில் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு சிக்கலுக்கும் எவ்வாறு தீர்வு காண்பது என பல்வேறு சிறுகதைகள் மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். 

இது சமூக  அறநெறி, ஆன்மிக மதிப்பீடுகள் எனும் இரு அத்தியாயங்களாக உள்ளன.

Advertisement

ஒவ்வொரு கதையின் இறுதியிலும் அதற்கேற்ற பழமொழியும், கருத்தையும் பதிவு செய்துள்ளது கூடுதல் சிறப்பைப் பெறுகிறது. முதல் அத்தியாயத்தில் சமூகம் சார்ந்த பிரச்னைகள் உருவாக காரணமும், அதற்கான தீர்வையும் வழங்கியுள்ளார்.  குறிப்பாக,  ஒருவரின் மனதில் நல்ல எண்ணங்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய தீய எண்ணங்களை தூக்கி எறிய வேண்டும், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்றுவது நமது கையில்தான் உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை விளக்கியிருப்பது ஓர் தனித்த இடத்தைப் பெறுகிறது. 

இரண்டாம் அத்தியாயத்தில் கீழ்ப்படிதல், பற்றின்மை, உண்மையுடைமை போன்ற அதிகாரங்கள் மூலம் வாழ்வின் அறநெறிகளை பதிவிட்டுள்ளார். சமூகத்தில் அன்பே மனிதனை இயங்க வைக்கிறது, மன்னிப்பே உறவை வலுப்
படுத்துகிறது என்பதை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். 

எண்ம (டிஜிட்டல்) உலகத்தில் மனிதர்களிடையேயான உரையாடல்களை ஊக்குவிக்கவும், இளைய தலைமுறையினருக்குத் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் வகையில் அமைந்திருக்கிறது இந்த நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.