முகப்பு
நூல் அரங்கம்

எதிர் நீச்சல்

Updated On : 8 ஜனவரி, 2024 at 3:39 PM
பகிர்:

எதிர் நீச்சல் -  எஸ். சுஜாதா; பக். 284; ரூ.330;   ஹெர் ஸ்டோரிஸ், சென்னை 600004; ✆ 75500 98666.

இந்த ஆணாதிக்க உலகத்தில் போராளிகளாக மாறி  சாதித்த பெண்கள் வெகுசிலரே உள்ளனர். சமூக நீதி, பொருளாதார சுதந்திரம், தனிமனித சாதனைகள் என வாழ்வியலின் பல்வேறு நிலைகளில் சாதித்த  பெண்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். 

வாழ்க்கை எனும் காட்டாற்றில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்ற அலிசியா மொண்டானோ தொடங்கி,  பாலின் காஃபர்கி வரை 53 பெண்களின் சாதனைகள் முத்துச்சரம் போல தொகுக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் பெண் போராளி மலாலா, குழந்தை திருமணங்களில் இருந்து 1,400 குழந்தைகளை காப்பாற்றிய இந்தியாவின் கீர்த்தி பார்தி,  தண்ணீர் மாதா என்று போற்றப்படும் மும்பையைச் சேர்ந்த ஆம்லா ரூயா உள்ளிட்டோரின் சாதனைகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.  அதுபோன்று அழிந்து வரும் செம்மரங்களின் வகையைச் சேர்ந்த லூனா மரத்தை காப்பாற்றுவதற்காக தனி ஆளாக மர உச்சியில் ஆண்டுக்கணக்கில் குடியிருந்த ஜூலியா பட்டர்பிளை ஹில் அமெரிக்காவின் புரட்சிப்பெண்.  இனி செம்மரம் வெட்டப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை பெற்ற அவரது கதையை படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

Advertisement

சமூக அக்கறை, பெண்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதலும் வெறியும்தான் வெற்றிக்கு காரணம் என்ற உண்மையை இவர்கள் உணர்த்துகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.