முகப்பு
நூல் அரங்கம்

என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு (திரைப்பட ரசனைக் கட்டுரைகள்) - இரா. நரேந்திரகுமார்; பக். 330; ரூ.360; காவ்யா வெளியீடு, சென்னை - 24; ✆ 044-2372 6882.

திரையிசைப் பாடல்களை ரசித்து, அதை அழகியலுடன் எழுத்தில் வடித்து, 'அட... இப்படியும் ஒரு ரசிகர் இருப்பாரா?' என வியப்பில் ஆழ்த்தி, பிரமிக்க வைக்கிறார் நூலாசிரியர். அட்டைப்படத்தில் 'விழிமொழி அழகி' ஈ.வி.சரோஜாவை காணும்போதே இவர் ஒரு வித்தியாசமான ரசனைக்காரர் என்பதை உணர முடிகிறது. நூலுக்குள் பயணித்தால் அவரது திரைவானத்தில் மின்னும் வெள்ளி நிலவுகள் வசீகரிக்கின்றன.

சிவாஜி கணேசன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பி.சுசீலா, டி.எம்.செüந்தரராஜன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் எனப் பலரையும் இவர் ரசித்த விதம் கவனம் ஈர்க்கிறது. 

'பொன்னூஞ்சல் திரைப்படம் வெளிவந்தபோது,  சிவாஜியின் வயது 45. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஆறு. அவற்றில் குறிப்பிடத்தக்க பாடல் 'ஆகாயப் பந்தலிலே'. இப் பாடல் பாரம்பரிய இசை - நாட்டுப்புற இசை - மேற்கத்திய இசை என மூன்று இசைக் கலவையில் உருவாக்கப்பட்டது.'; 'விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த படங்கள் 86. எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டும் தனித்து இசையமைத்த படங்கள் 418'. இவ்வாறு பல்வேறு தகவல்களும் அடங்கியுள்ளன. 'தமிழ்க்காலம் அருளிய அருட் கொடைகள்', 'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று', 'இலக்கியம் தழுவிய திரையிசை' என்பன உள்ளிட்ட 16 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பாடல்களை கூர்ந்து கவனித்து, பல்வேறு இசை நுட்பங்களை வியந்து ரசித்து, நம்மை பரவசப்படுத்துகிறார் நூலாசிரியர். திரை ரசிகர்கள் கொண்டாடும் நூல்களில் ஒன்று.
 

முழு கட்டுரையைப் படிக்க →