செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள்
செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள் - டிரிஸ்ட்ரம் பி.காஃபின் - தமிழில் - வானதி; பக். 264; ரூ.300; சுவாசம் பதிப்பகம், சென் னை-127; ✆81480 66645.
மென்பொருள் நிறுவனத் துணைத் தலைவராகப் பணியாற்றும் முத்து பிரகாஷ், தனது புனைபெயரில் பல்வேறு நூல்களை எழுதி வருகிறார். அதிலும், அரிதான ஆங்கில நூல்களையும், சரித்திரங்களையும் தமிழில் மொழிபெயர்ப்பது இவருடைய சிறப்பு.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டது. அதிலும், செவ்விந்தியர்களின் கதைகள் ஆச்சரியப்படுத்தும், பரவசப்படுத்தும், புன்னகைக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், ஏன் அதிர்ச்சியைக் கூட அளிக்கும்.
இயற்கையின் மீதான அவர்களது காதல், கட்டற்ற சுதந்திரத்தை இந்தக் கதைகள் சுவாரசியமாக எடுத்துரைக்கின்றன. அவர்களது வாழ்க்கை விசித்திரமானது என்பதை படிக்கும்போது அறிய முடிகிறது. மொழிபெயர்ப்பு என்பது தெரியாதவாறு எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது நூலாசிரியரின் தனிச்சிறப்பு.
உலகம் இருக்கும் விதம், மனிதன் தெரிந்துகொள்ள வேண்டியதும் அறிந்துகொள்ள வேண்டியதும், வாழ்வின் இன்பம் என்று மூன்று பிரிவுகளாக, 45 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
நாயை மணந்த பெண், நஞ்சுக்கொடிச் சிறுவனும் வீட்டுச் சிறுவனும், கயோட்டி பூதத்தைக் கொல்வது, நடக்கும் எலும்புக் கூடு, உருளும் பாறை, பருந்து ஏன் வழுக்கையாக இருக்கிறது, மரக்கட்டையுடன் தூங்குதல், ஆமையின் புனிதப் போர் மூட்டை உள்ளிட்டவை படிக்க பெரிதும் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.
பழங்குடியினர்கள் விநோதப் பழக்கங்களைக் கொண்டிருந்தாலும், இந்த அளவுக்கான பழக்கங்களைக் கொண்டிருக்க முடியுமா என்ற வியப்பு மேலிடுகிறது. பழங்குடியினரின் வாழ்க்கையை அறிய உதவும் நூல் இது.