கறுப்பு அமெரிக்கா
கறுப்பு அமெரிக்கா - வானதி; பக்.352; ரூ.400; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044-42009603.
இந்நூல், அமெரிக்க வரலாற்றின் முக்கியமான அத்தியாயம் என்பது மட்டுமல்ல; நூலாசிரியரின் முந்தைய நூலான 'அமெரிக்க உள்நாட்டுப்போர்' என்பதன் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.
அமெரிக்காவின் வரலாறு தியாகங்களாலும், போராட்டங்களாலும் மட்டுமே எழுதப்பட்டது அல்ல. ரத்தத்தாலும் எழுதப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. எண்ணற்ற அநீதிகள் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இன்னமும் அமெரிக்கா தனது காயங்களை ஆற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.
இன்றைக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டாலும், கருப்பினத்தவர் போதுமான அரசியல் அதிகாரத்தை அடையவிடாமல் வெள்ளையர்களின் கைகளை எதிர்நோக்க வைத்த சட்டங்கள் குறித்து இந்நூல் விரிவாக அலசுகிறது.
அடிமைமுறைக்கு முடிவு கட்டிய ஆபிரகாம் லிங்கன் மறைவுக்குப் பிறகும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு வெள்ளையரின் இனவெறியை கருப்பினத்தவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கு 1865 - 1968 வரையிலான அமெரிக்க வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரிவாக அலசுகிறது.
இந்நூல் அமெரிக்காவின் கடந்தகாலக் கதை என்றாலும் அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது என்பதுதான் வேதனை. கடந்தகால இழிவுகளை நாம் நினைவூட்டிக் கொள்வதன் மூலம் மீண்டும் அப்படியானதொரு நிலைக்கு உலகில் எந்த நாடும் செல்லக்கூடாது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.