முகப்பு
நூல் அரங்கம்

மக்களாட்சி பழகுவோம்

ஊரக நிர்வாகம், மக்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பொருள்களில் எழுதப்பட்ட 25 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

மக்களாட்சி பழகுவோம் - க. பழனித்துரை; பக்.142; ரூ.190; புரட்சி பாரதி பதிப்பகம், ஆவடி- 600055; ✆9043050666.

ஊரக நிர்வாகம், மக்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பொருள்களில் எழுதப்பட்ட 25 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

அரசியல்வாதிகளின் மக்களாட்சி பற்றிய புரிதல் என்பது தேர்தலைத் தாண்டவில்லை என்று ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மக்களாட்சி என்பது காலத்துக்கு ஏற்ப பல மாறுதல்களை அடைந்து வருகிறது என்றும் ஆட்சிமுறைகளை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான புரிதலுடன் செயல்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

'மக்களாட்சியை ஆழமாகவும், நீளமாகவும் உயரமாகவும் எடுத்துச் செல்வது முக்கியம். இந்தியாவில் மக்களாட்சி தேர்தலுக்கு அடங்கிவிட்டது. இதன் விளைவாக மக்களாட்சியின் மேல் மக்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டனர்' என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

'பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற நிலையைப் போராடி அடைந்த பல நாடுகள் மக்களாட்சிக்கு மேம்பட்ட விளக்கங்களைத் தந்து, தங்களை பாராளுமன்றத்தின் தாய் எனவும் தந்தை எனவும், அதை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் தூதுவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டன. அந்த மக்களாட்சிக்கு குறை ஏற்பட்டுவிடாமல் பாதுகாப்பதுதான் தங்களுடைய தலையாய பணி என்று பிரகடனப்படுத்திக் கொண்ட நாடுகளும் உண்டு' என்று 'கட்சி அரசியலும் புதிய அரசியலும்' என்ற கட்டுரையில் நூலாசிரியர் கூறுகிறார்.

'கட்சி நடத்துவது அல்ல அரசியல். மக்களுக்கான மக்கள் அரசியல் கட்டுவது என்பது புது அரசியலாகும். அந்தப் புதுமையை நோக்கிச் செல்ல ஆத்ம பலம் மிக்க தலைவர்கள் தயாராக வேண்டும். அவர்கள் புது கட்சி ஆரம்பிக்காமல், புது அரசியல் கட்ட வேண்டும், அதுதான் இன்று நமக்குத் தேவை' என்று வலுவாக கூறுகிறார்.

கடந்த கால் நூற்றாண்டாக மக்களாட்சி பயணிக்க வேண்டிய புதிய திசையைக் கோடிட்டு காட்டி வரும் இந்நூலாசிரியரின் சிந்தனைக் குவியலை பொதுப்பணியில் ஈடுபடுவோர் வாசிக்க வேண்டியது அவசியத் தேவை.

முழு கட்டுரையைப் படிக்க →