முகப்பு
நூல் அரங்கம்

தொழில் செ(ய்)ய விரும்பு

வஸ்து எது என்பததைத்தான் நூல் முழுவதும் ஏராளமான நிகழ்வுகளுடன், உதாரணங்களுடன், நூலாசிரியர் எடுத்துச் சொல்லியுள்ளார்.

Updated On : 2 மார்ச், 2026 at 6:13 PM
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 6:11 PM

தொழில் செ(ய்)ய விரும்பு-பி.கே.பழனிக்குமார்; பக்.190; ரூ.208; விகடன் பிரசுரம், சென்னை- 600 002, ✆ 80560 46940.

தேவை மனிதனை பலசாலி ஆக்கும்; அந்தத் தேவைதான் இத்தனை கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரம்; அவை தேவைப்படுவோரின் கைகளுக்குச் செல்வதே வியாபாரம். தேவையை உணர்ந்து வியாபாரப் பொருளைத் தேர்ந்தெடுப்பதுதான் முதல் படி. செடி, கொடிகள், விலங்குகள், மனிதர்கள், பிற உயிருள்ள மற்றும் உயிரற்றவை என எல்லாவற்றிலும் தொழிலுக்கான வாய்ப்புகள் நிரம்பி இருக்கின்றன என்கிறார் நூலாசிரியர்.

Updated On : 2 மார்ச், 2026 at 6:12 PM

வாங்குபவரையும் விற்பவரையும் இணைப்பது காசு மட்டுமல்ல; இன்னொரு 'வஸ்து' இருக்கிறது என்கிற ரகசியம் வியாபாரத்தின் ஆகச் சிறந்த மந்திரம். அந்த வஸ்து எது என்பததைத்தான் நூல் முழுவதும் ஏராளமான நிகழ்வுகளுடன், உதாரணங்களுடன், நூலாசிரியர் எடுத்துச் சொல்லியுள்ளார்.

Advertisement

ஒட்டுமொத்த முதலீட்டு வாய்ப்புகள், திட்டமிடல், கள ஆய்வு செய்தல், நேரம் தவறாமை, வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு என அனைத்தையும் தாண்டி தொழிலில் ஒருவர் வெற்றி பெற உன்னதமான விஷயமாக நூலாசிரியர் கூற வருவது என்னவென்றால், எல்லோரிடத்திலும் எதையும் எதிர்பாராத நட்புறவுடன் பழக வேண்டும் என்பதே. அது வாடிக்கையாளர்களாக இல்லாவிட்டாலும் சரி என்கிற உயர்ந்த- எளிமையான வெற்றிச் சூத்திரத்தை பிரகடனப்படுத்துகிறார்.

'ஒருவரை நீங்கள் ஆள வேண்டுமானால் முதலில் அவரின் இதயத்தை வெல்லுங்கள்' என்கிற வாக்கியம் தனக்குப் பிடித்த வாக்கியம் என்கிற நூலாசிரியரின் கருத்து தொழில் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமானது.

ஒவ்வொரு வாரமும் தொடராக வந்த பகுதிகளைத் தொகுத்து ஒரே புத்தகமாக தந்திருப்பதன் நோக்கம், தொழில்முனைவோருக்கான கையேடாக இது இருக்கும் என்பதுதான். அந்த நோக்கம் நிச்சயமாக நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.