பார்த்த ஞாபகம்
பார்த்த ஞாபகம் (சிறுகதைகள், சிறுசிறு கதைகள்)- பாலசாண்டில்யன்; பக்.194; ரூ.180; குவிகம் பதிப்பகம், சென்னை-78; 89396 04745.
கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், மனநல ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நூலாசிரியர் பல மாநிலங்களுக்குச் சென்று தொழிற்துறையினருக்குப் பயிற்சி அளித்தவர். இவருடைய 15-ஆவது நூல் சிறப்பு மிக்கதாகவே அமைகிறது.
தினமணி கதிர் உள்ளிட்ட பல இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். நாலைந்து வார்த்தைகளில் 10 'நச்' சிறுகதைகள், நாலைந்து பத்திகளில் 21 மின்னல் கதைகள் நூலாசிரியரின் அபாரத் திறமையை வெளிப்படுத்துகிறது. 11 குறுங்கதைகளும், 23 சிறுகதைகளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சமகால வாழ்க்கை முறையை அலசுகிறது. மனிதர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்தல், சுய முயற்சிகளில் வெற்றி பெறுதல், தோல்வியைக் கண்டு துவளாதிருத்தல், இன்றைய திருமணங்களும் நிறைவுரையும், ஆசிரியர்களுக்கு எழும் துன்பங்கள், முதியோர்களைப் பேணும் பெண்கள், அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறை என்று சிறுகதைகளிலேயே இன்றைய நவநாகரிக சமுதாயத்துக்கு மாபெரும் விழிப்புணர்வை அளிக்க முயன்றுள்ள நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.
கரோனா காலப் போராட்டங்களையும், வெளி மாநிலத் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளையும் படம் பிடித்துக் காட்டும் 'அடுத்த பிறவி' எனும் சிறுகதை பலரின் வாழ்க்கையில் நேரிட்ட உண்மைக்கதை எனலாம். பன்முகத் தன்மையோடு விளங்கும் அற்புதமான நூல். வாசிக்கச் சிறந்தது.