ஸ்ரீராகவேந்திர மகிமை (பன்னிரண்டாம் பாகம்)
ஸ்ரீராகவேந்திர மகிமை (பன்னிரண்டாம் பாகம்) - ஸôரஸ்வத ரத்னா அம்மன் சத்தியநாதன்; பக். 496; ரூ.350; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை- 5; ✆ 94459 52585.
அம்மன் சத்தியநாதனின் அற்புதமான ஆன்மிகப் படைப்புகளில் இந்த நூலும் ஒன்று. ஸ்ரீராகவேந்திரர் புரியும் மகிமைகள், ஓர் இடம் விட்டு, விரும்பிய இடம் தரும் மகிமை, தாசர்கள் வாழ்வில் செய்யும் சாகசங்கள், பக்தர்களின் வாழ்வில் நிகழ்த்தும் அரிய நிகழ்வுகள் உள்ளிட்ட சுவையான அம்சங்கள் வண்ணப்படத்துடன் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராம, ராம ராமேதி ரமே ராமே மனோரமே மந்திரத்தின் விளக்கம், அதை பிரம்மதேவர் ஏன் தியானம் செய்து மந்திரிக்கிறார். பரமாசார்யாள் பூஜித்த பவித்ரமான சிவலிங்கம், அதற்கான படங்கள் பற்றிய விவரங்கள் படித்தறியவேண்டிய தகவல்.
ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனங்களுக்கு சந்தனக் காப்பு செலுத்தப்படுவது, சந்தனம் அரைப்பதன் மகத்துவம், ராகவேந்திரரே சொன்ன நாமம், அவர் செய்த அநுக்ரஹம், திருடனாக வந்து நின்ற ராகவேந்திரர் பற்றிய விளக்கம் என ராகவேந்திரரை வணங்கும் பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கலாய் இந்த நூல் தகவல்களை அள்ளித் தருகின்றது.
இதுதவிர ஸ்ரீ கிருஷ்ணாவதூதர் அருளிய ராகவேந்திர அக்ஷரமாலிகா ஸ்தோத்திரம் நூலின் கடைசிப் பகுதியில் தரப்பட்டுள்ளது. ராகவேந்திரரை வழிபடும் பக்தர்களுக்கு அவர்
நிச்சயம் அருள்பாலித்து ஆசீர்வதிப்பார் என்பதற்கான பல ஆதாரங்களை ஆசிரியர் இந்த நூலில் சுட்டிக்காட்டி உள்ளார். அற்புதங்களை நிகழ்த்திய மகானின் மகிமைகளை அறிய இந்த நூல் பேருதவியாக இருக்கும். ஆன்மிக பக்தர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.