முகப்பு
நூல் அரங்கம்

தி.நா. சுப்பிரமணியன் கட்டுரைகள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

தி.நா. சுப்பிரமணியன் கட்டுரைகள் - (பதிப்பாசிரியர்) சு. இராஜகோபால்; பக்.356; ரூ. 450; ஒய்.எஸ்.எஸ்.ஆர். நிறுவனம், சென்னை 20; ✆ 76959 97993.

கல்வெட்டியல் துறை அறிஞரான தி.நா. சுப்பிரமணியன் பல்வேறு இதழ்களிலும் நாளேடுகளிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், அவரின் 83 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

'சோழன் செங்கணான்', 'பாரி மகளிரும் வேளிர்குலமும்', 'எண்பேராயம்', 'மலயத்துவசன்', 'சம்புகுலம்', 'வீரசோழனும் வீரசோழியமும்', 'காளிதாசனும் தமிழ்நாடும்', 'காவிரி பிறந்த கதை', 'வன்னிய மன்னர்' போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

தனக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டவர்களின் முடிவோடு தனது முடிவு இணைந்துசெல்லும் இடங்களையும் மாறுபட்டுச் செல்லும் இடங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் 'ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்' என்று குறிப்பிடுவது படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் உள்ளிட்ட எண்மர் என்றே அடியார்க்கு நல்லார் உள்ளிட்டோர் உரைகண்டுள்ளனர். ஆனால், இவரோ 'ஆயம்' என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்னும் பொருள் இருப்பதைச் சுட்டிக்காட்டி எட்டு இருக்கைகளையே 'எண்பேராயம்' என்ற சொல் குறிக்கிறது என்று நிறுவுகிறார்.

இவர் பள்ளியில் பயிலும்போது இவரின் ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார் என்பதும், இவரது ஆய்வு நூலை வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை வெளியிட்டுள்ளார் என்பதும், இவருடைய பெயரில் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் தமிழக தொல்லியல் கழகத்தில் ஓர் அறக்கட்டளை சொற்பொழிவு நிறுவியுள்ளார் என்பதும் இவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கான சான்றுகளாகும்.

பல்கலைக்கழகத்துக்கு வெளியே பல்கலைக்கழகத்திற்கு நிகராக ஆய்வு மேற்கொண்ட வெ. சாமிநாத சர்மா, பொ. திருகூடசுந்தரம் பிள்ளை, மயிலை சீனி. வேங்கடசாமி வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் தி.நா. சுப்பிரமணியன் என்பதை இந்நூல் அறுதியிட்டுக் கூறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →